https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Monday, January 29, 2018

புத்தகம் புதுமையையும் படைக்கும்

புத்தகம் புதுமையையும் படைக்கும்                 
புரட்சியையும்  படைக்கும் ........... ...
உலகில்   பெரிய  மாறுதல்களைப்  போர்க்களங்கள்  மட்டும்  செய்யவில்லை........
புத்தகங்களும்  செய்திருக்கின்றன........ 
காரல்மார்க்சின் 33 ஆண்டுகால  உழைப்பில் உருவான " மூலதனம் " உழைக்கும் வர்க்கத்தை உயர்த்திப் பிடித்தது ......
ரூசோவின்  புத்தகங்கள் தான்  லியோ டால்ஸ்டாயின்  உள்ளத்தில்  ஞானியாகும்  எண்ணங்களை உருவாக்கின...........
"கடையனுக்கும் கடைத்தேற்றம்" என்ற புத்தகம் தான்  மோகன்தாஸ் காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது .
சேக்கிழார்  எழுதிய பெரிய புராணம் தான்  திருச்சுழியில்  பிறந்த வெங்கட்ராமனை  மகான் ஶ்ரீரமண மகரிஷியாக மாற்றியது .............
தான் தூக்கில் இடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரையிலும்  வாசித்துக்கொண்டே இருந்தார்  பகத்சிங்.........
பயங்கரமான  போராட்ட  ஆயுதங்கள்  எவை  என்று கேட்டபோது புத்தகங்கள் தான்  என்றார் மார்ட்டின் லூதர்கிங் ..........
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது  வரும் முன்பணத்தில்  முதல் 100 டாலருக்குப் புத்தகம்  வாங்குவாராம்  சார்லி சாப்லின்........
சிறையில் புத்தக வாசிப்பை  அனுமதிக்க வேண்டும் என்றார் நெல்சன் மண்டேலா..............
மனிதர்களின் பெரிய கண்டுபிடிப்பு எது? என்ற போது சற்றும் யோசிக்காமல்  " புத்தகம் "  என்றார் ஆல்பர்ட்ஐன்ஸ்டின்....,.......
தனிமையான தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது  புத்தகங்களின்  மகிழ்ச்சியாக  வாழ்ந்துவிட்டு  வருவேன் என்றார் நேரு.....,,,,.... வாசிப்பு என்பது ஓடும் ந தியைப் போல.....
ஒரு புத்தகம்  இன்னுமொரு புத்தகத்திற்கு அழைத்துச்செல்லும் .... முடிவில்லா அந்த   ந தியில் நம் மாணவச்செல்வங்களை மூழ்க வைத்து சுகங்களை நாம் அனுபவிக்கலாம் ..............
மண்புழுக்கள் மண்ணை வளமாக்கும் புத்தகப்புழுக்கள்  மனதை வளமாக்குவர் .........
இன்று திரு இளங்கோ ஐயா அவர்கள் அனுப்பிய  புத்தகங்களை பெற்ற மகிழ்ச்சியில்  ஐந்தாம் வகுப்பு. மாணவ / மாணவிகள் .............,
நன்றி ஐயா  ..  நன்றி .... தங்களை வணங்கி மகிழ்கிறேன் ......