https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Saturday, September 28, 2019

பிறந்த நாள் வாழ்த்து

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி ........வானின்று ஒளி தந்து
வாழ்விக்கும் உயிர்களையும்
தானென்ற ஆனவத்தை தரித்திடாதக் கதிரவன்!
அதன் பெயரை பெற்றவரே
அறம் செய்யக்கற்றவரே
கலிகாலக் கர்ணன் போல்
கல்விக்குக் கொடுப்பவரே
தேவையென்று கேட்டு விட்டால் தேடிச்சென்று உதவிசெய்யும்
தேவதூதனே
தேன் தமிழால் வாழ்த்துகிறோம்

தேகநலன், தேயாத செல்வமுடன் பல்லாண்டு வாழ்க.வாழ்க!

பிரணவ் பிறந்தநாள்வாழ்த்துகள்


இன்று பிறந்த நாள் காணும் செல்வன் பிரணவ் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துவோம்...இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பிரணவ்....

உலக சாதனை நிகழ்வு பனை

உலக சாதனை நிகழ்வு.....(22/09/2019) பனையைக்...
காப்போம்

பனையே முது பெரும் பனையே 
உன்னை நீர் ஊற்றி வளர்க்கவில்லை 
நிலத்திற்கு பசளை இட்டதில்லை 
நிரை நிரையாய் வளர்வதற்கு 
உன் விதையை ஊன்றி விட்டனர் மக்கள் 
அதுவும் தங்கள் வயலின் 
எல்லையைக் காப்பதற்கு .....
மக்கள் எதிலும் சுயநலம் ....ஆம்

ஆனால் சுயநலமே இல்லாத 
பனைமரம் நீ... உன்னால் 
நாங்கள் அடையும் பயன் 
எண்ணற்றவை பனை என்றால் 
பனை காடு என்றால் இழிவாகவும் 
எளிமையாகவும் நினைப்பதுண்டு 
ஏன்/ எல்லாம் உன்னிடம் இருந்தும் 
உன்னிடம் கிளைகள் இல்லையே 
உன்னிழலில் தங்க இடம் இல்லையே , 

நெடு நெடுவென்று வளர்ந்து 
உச்சியிலே ஒரு முடியைப் போல் 
அழகான குருத்தோலை காவோலை 
குண்டு குண்டு பழங்கள் எல்லாமே 
அத்தனையும் மக்கள் தேவைக்கு 
ஏற்றாப் போல் தலையாலே சுமக்கின்றாய் 

அண்ணார்ந்து பார்த்தால் ஆச்சரியம்தான் 
எவ்வளவு உயரம் கன்னங் கரேலென்று 
எதற்கும் அச்சமின்றி வளர்ந்து நிற்கின்றாய் 
உன்னால் மக்கள் அடையும் பயன்கள் நிறைய 
கற்பகம் எனும் அழகிய பெயர் 
உனக்கு மிகவும் பொருத்தமே
எத்தனை புயல் அடித்தும் பனை வீழ்ந்ததாக 
சரித்திரமே இல்லை 

அத்துணை உறுதி உன்னிடம் 
நீ நிலைத்தாலும் ஆயிரம் 

ஏன்/ எல்லாம் உன்னிடம் இருந்தும் 
உன்னிடம் கிளைகள் இல்லையே 
உன்னிழலில் தங்க இடம் இல்லையே , 
----ஆம் உண்மை 
ஒற்றைப் பனை மரமே உதவியில்லா நெடுமரமே ---பழைய கவிஞர்களும் 
பனையை இழித்துதான் பாடினார்கள் 
பனைமரத்தின் கீழே பால் குடித்தாலும் கள் குடித்ததாகத்தான் சொல்வார்கள் -- 
பனை தரும் தூய பதநியை கள்ளாக்கியது யார் செயல் ? 
பனங் கம்பால் கூரை அமைக்கிறார்கள். பனை ஓலையால் கூரை வேய்கிறார்கள். 
அதில் குளிர்ச்சியாக வாழ்கிறார்கள். 
ஏன் ? கோடையில் விசிறியாக பனை ஓலைதானே பயன்படுகிறது. 
தென்னங் கீற்றிலா விசிறி செய்கிறார்கள் ? 
இழித்துப் பாடின இந்தப் புலவர்கள் எழுதியது இந்தப் பனை ஓலையில் தானே ....
இன்று உலக சாதனை நிகழ்வில் பூலோகத்துகல்பகதருவை.....தண்ணீர் அமைப்புடன் இணைந்து எம் பள்ளி மாணவக் கண்மணிகளுடன் இணைந்து நட்ட மகிழ்வான தருணம்.....நன்றி திரு சதீஸ் அவர்கள் 





நன்றி...திரு நீலமேகம் அவர்கள்...

தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா

இன்று..(23/09/2019) பாராட்டுவிழா பள்ளியின் தலைமையாசிரியர் ........



திருமதி பூ. ஜெயந்தி அவர்களுக்கு..

நாயகன் நல்லாசிரியர் விருது

*"நாயகன் - நல்லாசிரியர் விருது"*

திருச்சி ரோட்டரி கிளப் GEMS INNOVATORS சார்பாக "நாயகன் - நல்லாசிரியர் விருது" வழங்கும் நிகழ்ச்சி ஹோட்டல் லீ டெம்ப் போர்ட்டில் (Hotel Le Temp Fort) 24.09.2019 அன்று மாலை 8.00 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ROTARY CLUB OF TRICHY GEMS INNOVATORS - RI 3000  தலைவர் வள்ளியப்பன் தலைமை தாங்கினார்.. பவர் இன்ஸ்டிடியூட் இயக்குநர் திரு. சூர்யகுமார் ஆசிரியர் திருமதி  கன்னியம்மாள், ஆசிரியர் திருமதி வாசுகி திலகா மற்றும் என்னுடைய  கல்வி சேவையை பாராட்டும் விதமாக ROTARY CLUB OF TRICHY GEMS INNOVATORS சார்பாக  "நாயகன் - நல்லாசிரியர் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது....

ஜான்சிராணி மகளிர் மன்ற தலைவர் ஹேமலதா மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். ROTARY CLUB OF TRICHY GEMS INNOVATORS பொருளாளர் சரவணன் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

இந்த விருதுக்கு என்னை தேர்வு செய்த





  Dr.B.R. அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் திரு ச.பக்கிரிசாமி தம்பி அவர்களுக்கு நன்றி.........panchayat union primary school Edamalaipattipudur,Trichy-12

Rotary club of Jerms 10000 வழங்கிய நிகழ்வு

பன்னாட்டு சுழற் சங்கம் என்பது சமூகசேவையைநோக்கமாகக் கொண்ட ஒரு பன்னாட்டுச்சங்கமாகும்.... இது உலகில் அமைதி, நல்லெண்ணம், ஆகியவற்றை உருவாக்க உதவும்பொருட்டு வணிகர் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு மதச்சார்பற்ற நிறம் இனம் மதம் பால் அரசியல் சார்பற்ற அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு திறந்த அமைப்பு....இவர்களின் முதன்மைக்குறிக்கோள் ' தன்னை விட மேலானது சேவை".என்பது.ரோட்ரியன்ஸ் என்று அழைக்கப்படும் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் இன்று பல்வேறு சமூகப்பணிகளைச்செய்தாலும் .....அரசுப்பள்ளிகளுக்கும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் எண்ணற்ற சேவைகளை செய்து வருகின்றனர்......விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்ததோடு இல்லாமல் என்னை அழைத்துவரவும் மீண்டும் கொண்டு வந்து விட வாகன வசதி செய்து,அறுசுவை உணவு வழங்கி...எம் பள்ளிக்கு ரூ10000 வழங்கி ( பத்தாயிரம்) பெருமைப்படுத் திய ROTARY CLUB OF TRICHY GEMS INNAVATORS அவர்களுக்கு எம் பள்ளியின் சார்பில் நன்றி..நன்றி.. அதற்கு உதவிய திரு பக்கிரிசாமிக்கும் மற்றும் ஜான்சிராணி குழுவின் தலைவி திருமதி ஹேமலதா அவர்களுக்கும் நன்றி.....