https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Sunday, September 30, 2018

அன்பு ப்பரிசு

இன்று (18/09/2018) பிறந்தநாள்  காணும் ஐந்தாம் வகுப்பு (ஆங்கிலவழிக்கல்வி)
மு.ரீமாஹசின்  அவர்களுக்கு  திரு அன்பு பிரணவ் அவர்கள் அனுப்பிய அன்புப்பரிசு...
வாழ்த்துகள் ரீமா...
நன்றி திரு அன்பு பிரணவ் சார்

தூய்மை திருச்சி மாவட்டம்

‘புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும் என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப சுற்றுச்சூழல்  பாதுகாப்பு உணர்வை மக்கள்நடுவே பரப்புவதற்கு “தூய்மை திருச்சி மாவட்டம்"
தெரு முனைப்பிரச்சாரத்தில்
ஊராட்சி ஒன்றியப்பள்ளி இடைமலைப்பட்டிப்புதூர்  மாணவ/ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ......

Friday, September 28, 2018

💐💐 குழவிகளின் கூந்தல் அலங்காரம்.💐💐

💐💐 குழவிகளின் கூந்தல் அலங்காரம்.💐💐

பூவையர்க்குப் பூவா. ?

கூந்தலின் பின்னலோ ஆஹா.!

உங்கள் கூந்தலின் பின்னல்களும் நூறு.

சமூகவியல் மதிப்பெண்களும் நூறு.

நீங்கள் எனது அழகு தேவதைகள் பாரு.

உங்களிடம் தோற்றிடுவார் நேரு.

இதற்கு like வருமா கூறு....🌹

வாழ்த்துவோம் வாருங்கள்

உலகிற்கு ஒளிதரும் கதிரவனைப்
பெயரில் மட்டுமல்லாது
செயலிலும் கொண்டவன்
அன்பும் கருணையும்
அதிகமாய்க் கொண்டவன்,
கலைத் தேன் பருகுவதில்
களைப்படையா வண்டவன்
நட்புப் பூக்களால் சூழப்பட்ட
நறுமணச் செண்டவன்
கொடுப்பதன் மூலம்
கோடி இதயங்களை வென்றவன்
அதிலும் அடுத்தவர் அறியாமல் தந்து
ஆர்பாட்டம் இல்லமல் சென்றவன்
புகழில் நிலைத்து நின்றவன்.
என் அன்புத் தம்பி
கதிரவன் செல்லப்பெருமாள்
காலமெல்லாம் வாழ்க! வாழ்க !
வாழ்த்துவோம் வாருங்கள் !
ஆர்ப

Wednesday, September 26, 2018

💐💐வண்ணத்துப்பூச்சி வாழ்க்கை வரலாறு💐💐

எண்ணங்களைக் கொள்ளைகொள்ளும்
வண்ணங்களில் ஒளிர்கிறாய்!

மலர்கள் தோறும் சென்றமர்ந்து
மதுவருந்தி மகிழ்கிறாய்!

பட்டாம் பூச்சி என்ற பெயரில்
பறந்து எங்கும் திரிகின்றாய்!

பார்ப்பதற்கோ எங்களுக்குப் பறக்கும் பூவாய் தெரிகின்றாய்!

உன்னை உற்றுப் பார்க்கிறேன்
என்னை நானேக்கேட்கிறேன்

முட்டையெனப் பிறப்பெடுத்து
பின்னர் புழுவாய் மாறினாய்

முட்கள் போல முடிகள்

கொண்ட லார்வா என்றே மாறினாய்!

தன்னைச்சுற்றிக் கூடுகட்டி
தவநிலையில் இறங்கினாய்!

பியூப்பா என்றக் கூட்டுப் புழுவாய்
பாப்பாப் போல உறங்கினாய்!

சின்னதொரு கூட்டுக்குள்ளே
வண்ணம் யாரு வரைந்ததோ!

என்னவொரு அழகுடனே எழிலுருவம் அடைந்தாயே!

கண்ணைக்கவரும் வண்ணமாகக்
காற்றில் எங்கும் மிதந்தாயே!
வண்ணத்துப் பூச்சியுன்னை வாய்பிளந்துப் பார்க்கிறேன்!

வண்ணங்களை எனக்கு நீயும் வழங்கிடவேக்  கேட்கிறேன் கேட்ககிறே!

Monday, September 03, 2018

மகாத்மா காந்தி அடிகள்

மகாத்மா...காந்தியடிகள் மனிதப்பிறவியில்  உயர்ந்த பிறவியாக உலகத்தில் மதிக்கப்பட்டதால்  அவரை முதன் முதலாக  ரவீந்தரநாத் தாகூர் “ மகாத்மா” என்று அழைத்தார் ....பகட்டு,ஆடம்பரம் ,எதுவுமின்றிஆயுத பலமின்றி ஆன்ம பலத்தாலும்   தாய்நாட்டு மக்கள் பலத்தாலும் ஆங்கில அரசைத்திரும்பிப் பார்க்க வைத்து திணறடித்த வர் காந்தியடிகள் .அவருடைய கடைசி சொட்டு இரத்தமும்  இந்தியாவுக்காகவே சிந்தப்பட்டது . ................
தன்னைக்கொன்றவருக்குக்கூட தீங்கு செய்ய வேண்டாம் என்று கூறியவர் மகாத்மா அவர்கள்.அவருடைய 150 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒட்டி காந்தி அடிகளின் வரலாற்று புகைப்படப் படங்கள், உலக நாடுகளில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகள் கண்காட்சி ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி , இடைமலைப்பட்டிப்புதூரில்...💐💐💐💐மணப்பாறை மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மணிகண்டம் வட்டாரக்கல்வி அலுவலர்கள்  பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் கண்டு பயன் பெற்றனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் திரு.பெ.விஜயகுமார் அவர்களால் அஞ்சல் தலைகள் அழகாக காட்சிக்கு வைக்கப்பட்டது. ..................உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்  மற்றும் பொதுமக்கள் கண்காட்சியைக்கண்டு. மகிழ்ந்தனர் ...
நன்றி..திரு விஜயகுமார்