https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Tuesday, November 20, 2018

தொலைபேசியில்....

தொலைவில் உள்ளவர் தொடர்பில் பேசிட
உதவும் கருவி!
காற்றில் மிதந்து வந்து
காதில் குரல் ஒலிக்கக்
கண்டநல் கருவி!
தொலைபேசி,
அலைபேசி,
கைபேசி என
நாம்பேசி மகிழ நல்ல சாதனம்!
வெளிநாடு வாழும் அன்புடை நெஞ்சம்
இரவி சொக்கலிங்கம் போன்றோர்
தாய்நாட்டுப் பிள்ளைகளோடு
தம்கருத்தைப் பகிர்ந்திட
வருங்காலத் தலைமுறைக்கு வாழ்த்தைச் சொல்லிட
வாய்பாக அமைந்ததொரு வசதியானக்கருவி,
இன்று அதன் மணி ஒலிக்க
சென்று கையிலெடுத்த என்கண்மணிகள்(14/11/2017

நின்று பல நிமிடங்கள் பேசி மகிழ்ந்தனர்.
பள்ளி நிறைவு மணி ஒலித்ததை மறந்தனர்.
வெளிநாட்டில் இருந்தபோதும்
தன்நாட்டின் தளிர்களோடு
தமிழில் பேசி ஊக்கப்படுத்திய தகையாளர்,கொடையாளர் ஐயா இரவிச்சொக்கலிங்கம் வாழ்க!வளர்க !
இன்று சர்வதேச ஹலோ தினம் .......

Saturday, November 17, 2018

விழிப்புணர்வு பதிவு

#விழிப்புணர்வு_பதிவு

வெளிநாடு செல்லும் நண்பர்கள் கவனத்திற்கு.......

என் நண்பர் ஒருவர் துபாய் சென்றார். அவருக்கு இங்கு நீங்கள் படித்த படிப்பிற்கு அதே வேலை வாங்கி தருவதாக சொல்லி ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கி அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அங்கு சென்றதும் லேபர் வேலை கொடுத்துவிட்டனர் .காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை பளு அதிகம்,

அதை கேட்டதற்கு அந்த நிறுவனம் அவரை அடித்து துன்புறுத்தி உள்ளது, உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளனர், நீ லேபர் வேலைக்காகதான் உன்னை அழைத்து வந்தேன், நீ ஒப்பந்தம் செய்து கொடுத்துள்ளாய் உன்னாலும், அரசாங்கத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி அந்த நபரை துன்புறுத்தி உள்ளது,

மன வேதனை அடைந்த அந்த நபர் என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையில் இருந்தார், இதை அறிந்து தெய்வம் போன்று அங்கு வந்த அன்பு அண்ணன் ரவி சொக்கலிங்கம் அவர்கள் அந்த நிறுவனத்தின் முதலாளியை நேரில் சென்று பார்த்து விவரத்தை கேட்டு அறிந்தார்.  பின்னர் அவர்கள் கூறியது என்னிடம் அவர் லேபர் வேலை வருவதாக கையொப்பம் இட்ட ஒப்பந்தம் உள்ளது என்று கூறிஉள்ளனர்,

அடுத்து அண்ணன் ரவி அவர்கள் உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசி அந்த நபரை வேதனையில் இருந்தும் அந்த நிறுவனத்திடம் இருந்தும் மீட்டு அவரை தமிழகத்திற்கு பத்திரமாக அனுப்பிவைத்தார்..

அண்ணா ஒரு உதவி என்று சொன்ன உடனே ஒரு மாதகாலம் துபாயில் போராடி பல பிரச்சனைகளை சந்தித்து அந்த நபரை பத்திரமாக மீட்டு பெற்றோர் இடம் ஒப்படைத்த அண்ணன் Ravi Chokkalingam அவர்களுக்கு மனமார்ந்த கோடி நன்றிகள்..

இனியாவது வெளிநாடு செல்லும் நண்பர்கள் கவனத்துடன் இருக்கவும்,
அவர்கள் நீட்டும் அனைத்திலும் கையொப்பம்  போடாதிர்கள்.

#குறிப்பாக ஒப்பந்தத்தில் கையொப்பம் இடும் போது நன்றாக படித்து பார்த்து கையொப்பம் இடவும்...

பிறந்த நாள் வாழ்த்துகள்

காஞ்சிபுரத்தின்
பெருமையே....
முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்று...
தமிழகத்தின்  முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த ஊர்....
பட்டு கைநெசவு சேலைகளுக்கு புகழ் பெற்றது...
காஞ்சி பட்டு சேலைகள் புவிசார் குறியீடு பெற்றது......
இந்தியாவின்
பெருந்தொழில் மாவட்டம்...
உண்டாம்,நிஷார்,மிட்சுபிசு,போர்டு,பிஎம் டபிள்யு யமகா, போன்ற கார் நிறுவனங்கள்   உள்ள மாவட்டம்...
மின்னணு உற்பத்தி  நிலையங்கள் அதிகம் உள்ளது....
பெருங்கற்கால இடங்களில் அதிகம்  கொண்டது...
கண்ணாடி கள் அதிகம்  உற்பத்தி ஆகும் இடம்....
இன்னும் பல பெருமைகளைபெற்ற காஞ்சிபுரம்  மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த அன்புத்தம்பி,
வித்தியாசமாக சிந்திப்பவர்,ஓயாது உழைப்பவர், விடுமுறையிலும் மாணவர் நலன் கருதி செய்த செயல்பாடுகளை தான் மட்டும் பயன்படுத்தாமல் மற்றவர்களும் பயன்பட வழங்கிய திரு செல்வகுமார் அவர்கள்..... 2017  தேசிய  தகவல் விருது  பெறுவதில் மிக்க மகிழ்ச்சி......உன்னால் எங்களுக்கு பெருமை.......

வெடிகளைக்குறைப்போம்......செடிகளை வளர்ப்போம்.....

நேற்று#02-11-18 #திருச்சியில் #தண்ணீர் #அமைப்பின் சார்பில் மதியம் #எடமலைபட்டி புதூர் #உயர்நிலைப்பள்ளியில் #தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே #பிளாஸ்டிக்  #தவிர்ப்போம், #துணிப்பை #எடுப்போம். வெடிகளை குறைப்போம், செடிகளை வளர்ப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு வீதி நாடகம் நிகழ்த்தப்பட்டது.                                                                                                                                        இந்நிகழ்விற்கு #தண்ணீர் #அமைப்பின் #செயலாளர்  கே. சி. #நீலமேகம் தலைமை வகித்தார்,                                   #தண்ணீர் அமைப்பின் #இணைச்செயலாளர் ஆர்.ஏ. #தாமஸ் முன்னிலை வகித்தார்.                                                                    #பேராசிரியர் #சதீஷ் குமார் தலைமையில் விழிப்புணர்வு வீதி நாடகம் நிகழ்த்தப்பட்டது.                                                                  இந்நாடகத்தின் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்,   துணிப்பையை எடுப்போம்.                                             வெடிகளை குறைப்போம், செடிகளை வளர்ப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.                                                            அதனைத் தொடர்ந்து மாணவரிடையே நெகிழிப் பைகளில் தீமைகளை எடுத்துக் கூறப்பட்டது.                                                                 இந்நிகழ்விற்கு #மணிகண்டம் #Aeo #மருதநாயகம் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.                                                                  #200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும்  #ஆசிரியர்கள்  கலந்துகொண்டு நாடகத்தைக் கண்டு பயனடைந்தனர்.                                            நாடகத்தை #கலைக்காவிரி #நுண்கலைக் கல்லூரி #தண்ணீர் #சுற்றுச்சூழல் மாணவர் மன்ற மாணவர்கள் நிகழ்த்திக்காட்டினர். நாடகத்தின் முடிவில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள்,துணிப்பைகள் வழங்கப்பட்டன.                                                              முடிவில்  மாணவர்கள் அனைவரும் வெடிகளை குறைப்போம், செடிகளை வளர்ப்போம், நெகிழிப் பையைத் தவிர்த்து துணிப்பைகளை எடுப்போம் என்று உறுதி மொழி எடுத்தனர் இந்நிகழ்வை #செய்தியாக வெளியிட்ட #பத்திரிகை மற்றும் #ஊடக #நண்பர்களுக்கு  நன்றி நன்றி

நன்றி,நன்றி மீடியா டைம்ஸ், திருச்சி, 3/11/2018 திருச்சி மெயில், 3/11/2018 தினமணி 3/11/2018

நன்றி,நன்றி  மீடியா டைம்ஸ், திருச்சி, 3/11/2018 திருச்சி மெயில்,
3/11/2018 தினமணி 3/11/2018

நன்றி News 18.

நன்றி News 18.

பிறந்த நாள் வாழ்த்துகள்

இதயம் மகிழ வாழ்த்துகிறேன்.
இளங்கோ ஐயா வாழிய வே!
உதய நாளில் வணங்குகிறேன்!
உங்கள் ஆசி வேண்டுகிறேன்!
எதையும் தெளிவாய் சொல்பவரே
இதயம் அதனை வெல்பவரே!
எழுபத்து மூன்று வயதினிலும்
எங்கும் சுற்றும் சூரியனே!
பள்ளியென்றால்
துள்ளிச் சென்று
அள்ளிப் பரிசுகள் தருபவரே.
சொல்லில் இனியத் தமிழ்ச் சொல்லால்
சுகமுடன் வாழ வாழ்த்துகிறேன்.  வாழ்க வாழ்க.

பாராட்டுவிழா

அரசுப்பள்ளியின் காவலன் நீ....
ஆசிரியர்களின் அரும்பணியை பாராட்டுபவன் நீ...
இல்லை என்ற வார்த்தை அறியாதவன் நீ....
பள்ளிக்கு என்று கேட்டால்
அள்ளிக் கொடுத்திடும் அட்சய பாத்திரம் நீ...
சொல்லில் தேன் கலந்தே
தொடர்ந்து பேசிடும் களஞ்சியம் நீ...
பிள்ளைகள் என்று வந்தால்
பிரியமாய்ப் நடந்திடும் தாய் நீ.....
பிறந்தநாளில் பரிசனுப்ப
மறந்தும்  இருந்ததில்லை நீ.....
சிறந்தவரைப் பாராட்ட சிறிதும்  தயங்கியதில்லை நீ.....
எல்லையில்லா கருணையோடு
எந்நாளும் அறம் புரியும் தாய் நீ...... மாணவர்களை நேசிக்கும் ஆசான் நீ....
மாற்றங்களை யோசிக்கும் பொறியாளன் நீ... 
.பக்தியின் பகலவன் நீ....
மழலையர் களை மகிழ்விக்கும் தந்தை நீ......
என் இன்ப துன்பங்களில்
பங்குபெறும் சகோதரன் நீ....
இன்றைக்கு உந்தன்  பிறந்த நாள்.. பல்லாண்டு காலம்  வாழ..வாழ்த்துவோம்.....

பிறந்த நாள் வாழ்த்துகள்

இன்று பிறந்த நாள் காணும் ..........
சிங்கையிலே இருந்த போதும்
தன்கையால் அள்ளித் தந்து
பங்களிப்பை நல்கியே
பள்ளிகளுக்கு உதவிடும்
பெயரிலேயே
அன்பு உள்ளவர்......
அரசுப்பள்ளி குழந்தைகளின் மீது அதிக  அன்பு கொண்டவர்...
குழந்தைகளின் திறமையைக்கண்டு பாராட்டி பரிசுப் பொருளை வழங்குபவர்...
திரு
அன்பு பிரனவ் அவர்கள்
அவதரித்த நன்நாளில்
அன்னை தமிழெடுத்து
அன்புடனே வாழ்த்துகின்றேன்.....வாழ்க....பல்லாண்டு....

Match the compound words

இன்றைய(09/11/2018) விளையாட்டு.... Match and Make the compound  words.......
Vth standard  english medium.........Panchayat union primary school, Edamalaipattipudur, Trichy-12

குழந்தைகள் தின விழா

குழந்தைகளைக் கொண்டாட நாங்களும்  ரெடி...
குழந்தைகளைக் கொண்டாட.....
குணவாளர் இரவியவர்கள்
கொடுத்திட்டார் வாழ்த்துமடல்.
அழகானத் தமிழ் கொண்டு
அரும்புகளை நாம் பாட
வளமானத் தமிழாலே
வசந்தங்களை வாழ்த்திட
வாழ்த்து அட்டை அனுப்பினார்..
வணங்குகிறோம் நாங்களுமே...மாணவர் மனங்குளிர
மணக்கும் தமிழாழே
மனங்குளிர வாழ்த்துகின்ற
மனிதநேயப் பண்பாளர் திரு
இரவி சொக்கலிங்கம் அவர்களுக்கு
மழலைகள் சார்பில் கோடி நன்றிகள்....