https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Sunday, April 07, 2019

சாதனைப்பெண்கள்

சாதனைப் பெண்கள் வரிசையில் சாதித்துக்கொண்டிருக்கும் ....புதுமைப்பெண்...லதாம்மாவிற்கு வாழ்த்துக்கள்...

பிறந்த நாள் வாழ்த்துகள்

நெஞ்சில் நேர்மை இருந்தால் ... 

குணத்தில் அழகு மிளிரும் ... 

குணத்தில் அழகு இருந்தால் 

இல்லத்தில் இணக்கம் வரும் 

இல்லத்தில் இணக்கம் வந்தால்

நாட்டில் ஒழுங்கு நிலவும் 

நாட்டில் ஒழுங்கு நிலவினால் உலகில் அமைதி தவழும் ..... என்று  முன்னால் குடியரசுத்தலைவர்ஐயா 

அப்துல்கலாம் அவர்கள் கூறியது போல , நேர்மை , பசுமை , உண்மை , வாய்ந்த   தம்பி Shankar Shrijan அவர்களுக்கு அக்காவின் பிறந்த நாள் வாழ்த்துகள்...

சூரிய பெண்மணி விருது பென் குயின்ஸ் விருது

மறக்க முடியாத நிகழ்வு...சென்ற ஆண்டு11/03/2018 திருச்சி சூரியன் எப்எம்  சார்பில் இந்திரா காந்தி கல்லூரியில்  மகளிர் தினவிழா நடந்தது, நான்கு சிறப்பு விருந்தினர்கள்,கவிஞர் சல்மா அவர்கள், திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனை டீன் திருமதி அனிதாஅவர்கள், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் திருமதி தேவி அவர்கள்,கட்டுரையாளர் சரண்யா சைதன்யா அவர்கள்,  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனைப்புரிந்த நால்வருக்கு பென் குயின்  விருதுகளை வழங்கினர்,ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா, பூர்ணோதயா பள்ளி நிறுவனர் கலையரசி, சமூக சேவகி திருமதிஅல்லிராணி பாலாஜி மற்றும் கல்வி த்துறையில் சிறந்த ஆசிரியர் விருதான  சூரிய பெண்மணி விருது வழங்கி பெருமை படுத்தினார்கள்.பெண்கள் நிரம்பி வழிந்த இந்திராகாந்தி கல்லூரியில் நான்கு சிறப்பு விருந்தினர்கள் பெண்களின் பெருமையை ,சாதனைகளை எடுத்துரைத்தனர்.மகளிர் தின விழாவில் பல்வேறு திறமைகளை காட்டி அசத்திய பெண்கள்...

குமுதம் சினேகிதி இதழில்....

குமுதம் சினேகிதி இதழில்....

ஆண்டு விழா

இடமலைப்பட்டி புதூர் பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகிறேன்


திருச்சி மாவட்டம் இடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வரும் வெள்ளிக்கிழமை (22-03-2019), பள்ளி ஆண்டு விழா, பள்ளிச் சீர் விழா என முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது.


இப்பள்ளி ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்ட, சென்னையிலிருந்து வருகிறேன்.


இவ்விழாவிற்கு நான் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்த Latha Balaji ஆசிரியைக்கு எனது பேரன்பும் வாழ்த்துகளும்... அப் பள்ளி தலைமை ஆசிரியைக்கு எனது நன்றிகளும் உரித்ததாகட்டும்.


இயன்றோர் நிகழ்விற்கு வருக... சந்திக்கலாம். பிற்பகல் 2:30 மணியிலிருந்து இரவு வரை பல்வேறு கலை நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன. 


வாருங்கள் அரசுப்பள்ளி மாணவர்களை ஆசிரியர்களோடு இணைந்து கொண்டாடுவோம்... சந்தித்து அளவளாவுவோம்.

முப்பெரும் விழா

முப்பெரும் விழா....22/03/2019....

கார்மேகம் நீரெடுத்து

கனமழைதான் பொழிதல்போல

ஊர்மக்கள் ஒன்றிணைந்து 

சீர்கொண்டு வந்தார்கள்.

மகளுக்கு சீர்செய்யும்

மகிழ்வானப் பெற்றோராக,-உடன்

பிறந்தவளுக்குச் சீர் எடுக்கும்

உற்றநல் சகோதரனாக

சுற்றம் சூழ வந்தார்கள்

சுமந்து சீர் தந்தார்கள்.

கற்றலது தடையின்றிக்

காலமெல்லாம் தொடர்ந்திடவே

உற்றதோர் பொருளையெல்லாம்

உவகையுடன் தந்த நல்லப்

பெற்றோரைப் பெற்றதனால்

பெருமைகொள்ளுது எங்கள் இடைமலைப்பட்டி புதூர் பள்ளி

கல்யாணப் பெண்ணுக்குச்

சீர்கொண்டு வந்தனரே!

கல்விச் சாலைக்கு

இதுபோல் ஒரு சீரைக் கண்டதில்லைக் கேட்டதில்லை

எனக் காண்போர் வியந்திடவே

கைநிறைய அள்ளித்தந்த கரங்களை யாம் போற்றுகின்றோம்.!!!!

நினைவு நாள்

நினைவு நாள் ...

மறக்க முடியாத நிமிடங்கள்

மீளாத்துயரம் 


1 ஆண்டு

பத்திரிகை செய்தி

முப்பெரும் விழாவை....      முனைப்புடன் கண்டு....

அரசுப்பள்ளி யின்...

ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை..

ஆர்வத்துடன் பத்திரிக்கையில் வெளியிட்ட பத்திரிக்கை சகோதரர்களுக்கு !நன்றி நன்றி ! நன்றி 

தினகரன் 

தினமணி 

தினத்தந்தி 

இந்து தமிழ்

Panchayat union primary school,Edamalaipattipudur Trichy-12

பிறந்த நாள் வாழ்த்து

இன்று பிறந்த நாள் காணும் அன்புத்தம்பி, பசுமை விரும்பி  ....              தமிழரசன் அவர்கள்...... பல்லாண்டு காலம் வாழ.... வாழ்த்துவோம்

ஆண்டு விழா 2018..சீர் வரிசை

அர்த்தம் தந்த நாள் இது...


சென்ற வாரம் , சென்ற நாட்களில், 

அர்த்தம் தந்த நீண்ட மணித்துளிகள் இவை. 

சென்றது என்னவோ, சில மணித்துளிகள் மட்டும் சிந்தத் தான். ஆனால் செலவழித்தது என்பது அன்றைய மாலையின் பெரும்பகுதி. 

திரும்பி வர மனம் இல்லாமல், அல்லது திருப்பி அனுப்ப மனம் இல்லாமல் கட்டிப் போட்ட , சுட்டிகள் செய்த மாயம் அது. 

புதிதாய் சேர்ந்த குட்டிக்குழந்தைகளின் ஊர்வலம், வரவேற்பு, திலகம் இட்டு வாழ்த்துகள்,ஊர் மக்களின் பள்ளிச்சீர், வரவேற்பு வாத்தியம், ஆரத்தி , சந்தனம், மாலைகள் என்று ஒரு குடும்ப விழா வாக , ஒரு ஊர் திருவிழா வாக, ஒரு சிறு அரசு துவக்க பள்ளியின் ஆண்டு விழா இருக்குமா? என்று அதிசயப்பட்ட விழா வாக மனதில் நின்ற நிகழ்வு இது. 

பள்ளி ஆசிரியர்களின் கடும் அர்ப்பணிப்பையும், மாணவ மாணவிகளின் பெரும் திறமையையும் , நண்பர்களின் அன்பையும் கண்டு மகிழ்ச்சி. 

காலத்தை கட்டிப் போடும் வித்தை , இந்த குழந்தைகளுக்குத்தான் அதிகம் தெரிகிறது. கணக்கில்லா திறமைகளை தன்னுள் ஒளித்து வைத்திருப்பதால். 

இனி வரும் காலங்களில் இணைந்து ஆதரவை , அவர்களுக்கு தொடரும் நம்பிக்கையுடன் , மனதின் நெகிழ்ச்சி. 

நன்றிகள் பல. 

எடமலைப்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளி., 

பள்ளி கல்வி அலுவலர், தலைமை ஆசிரியை ,ஆசிரியைகள், பள்ளிக்குழந்தைகள், மற்றும் தோழி ஆசிரியை லதா பாலாஜி அனைவருக்கும் .