https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Sunday, April 07, 2019

சீர் வழங்கும் விழா

வண்டியில சீரு  வரும்...

வண்டியில சீரு 

வரும்....

பள்ளிக்கு வண்டியில சீரு  வரும்..............சித்திரையில் உழவு, ஆடியிலே விதைப்பு, ஐப்பசியில் களையெடுப்பு, ...............தையிலே அறுவடை, மாசியிலே வழிபாடு, விழா, கொண்டாட்டம் என்று வேளாண்மையின் உச்சங்களை தனதாக்கி கொண்டது தான் நமது தமிழர் பண்பாடு. தமிழ் சமுதாயத்தை பொறுத்தவரை அவர்கள் கொண்டாடும் விழாவாக இருந்தாலும் சரி, சடங்குகளாக இருந்தாலும் சரி, வழிபாடாக இருந்தாலும் சரி, அதன் அர்த்தமெல்லாம் வேளாண்மை பண்பாட்டை சார்ந்தே அமைந்திருக்கும். நிலம், நிலத்தை பண்படுத்தும் உயிரினங்களை மட்டுமின்றி, பிறந்த வீட்டு பிள்ளைகளையும் சேர்த்தல்லவா கொண்டாடி மகிழ்கிறது.


சீர் வரிசை

வேளாண்மை பண்பாடு சார்ந்து தமிழர் வாழ்வில் நடைபெறும் சீர்கள் கொஞ்சமா? நஞ்சமா? பிள்ளைச்சீர், தொட்டில் சீர், உண்டாட்டு சீர், காதுகுத்து சீர், எழு திங்கள் சீர், தெரட்டி சீர், கல்யாண சீர், தலை ஆடிச்சீர், திருவாதிரை சீர், வளைகாப்பு சீர், பொங்கல் சீர் என்று இந்தச் சீர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். பிறந்த வீட்டு பிள்ளைகளுக்கு பெற்ற தாயும், உடன் பிறந்தானும் தாய் மாமனும் பாசத்தோடு செய்யும் இத்தகைய சீர்களை எளிதில் புறக்கணித்துவிட முடியாது....

ஆமாங்க.. அசந்துட்டோம்

அ முதல் ஃ வரை பள்ளிக்கு தேவையான அத்தனைப்பொருள்களையும் வாரி வழங்கிய பொதுமக்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை..........Band வாத்தியங்கள் முழங்க...பொது மக்கள் சீர் கொண்டு வந்த அழகே அழகு.....Panchayat union primary school,Edamalaipattipudur Trichy-12

No comments:

Post a Comment