https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5WZRmcMxsusv_VaFFc-aroPsJxpPzPdkJgCs_k6zlLQhOFKvSxKy_a1ZDxy70qO6ji3s_dEFpjnhvlumFFjqtBj8xQsZ7t6M-AqJA04GYoGijFPrRNAeVtiM1toYYm1-SrrdnJQQihUeU/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Sunday, April 07, 2019

முப்பெரும் விழா

முப்பெரும் விழா....22/03/2019....

கார்மேகம் நீரெடுத்து

கனமழைதான் பொழிதல்போல

ஊர்மக்கள் ஒன்றிணைந்து 

சீர்கொண்டு வந்தார்கள்.

மகளுக்கு சீர்செய்யும்

மகிழ்வானப் பெற்றோராக,-உடன்

பிறந்தவளுக்குச் சீர் எடுக்கும்

உற்றநல் சகோதரனாக

சுற்றம் சூழ வந்தார்கள்

சுமந்து சீர் தந்தார்கள்.

கற்றலது தடையின்றிக்

காலமெல்லாம் தொடர்ந்திடவே

உற்றதோர் பொருளையெல்லாம்

உவகையுடன் தந்த நல்லப்

பெற்றோரைப் பெற்றதனால்

பெருமைகொள்ளுது எங்கள் இடைமலைப்பட்டி புதூர் பள்ளி

கல்யாணப் பெண்ணுக்குச்

சீர்கொண்டு வந்தனரே!

கல்விச் சாலைக்கு

இதுபோல் ஒரு சீரைக் கண்டதில்லைக் கேட்டதில்லை

எனக் காண்போர் வியந்திடவே

கைநிறைய அள்ளித்தந்த கரங்களை யாம் போற்றுகின்றோம்.!!!!

No comments:

Post a Comment