https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Sunday, April 07, 2019

தமிழுடன் நான்

தமிழுடன் நானும் எம் பள்ளி மாணவியரும்....

உலகத் திருமறையாம் திருக்குறள் ஒன்றே முக்கால் அடியில் வாழ்வியலைப்படம் பிடித்துக்காட்டுகிறது....


இரு சொல் ஆத்தி சூடி எண்ணற்றச்  செய்திகளை எடுத்தியம்பின..

நான்கு வரிக்குள் நாலடியாரில் சொல்லாத பொருளில்லை....இப்படி இனம் மொழிகளுக்கு அப்பாற்பட்டு மனித சமுதாயம் மனிதத்தன்மையுடன் வாழ வேண்டுமென  நன்னெறிப்படுத்துவதே மேற்கண்ட நூல்கள் தான்...தடம் மாறித் தடுமாறிச் செல்லும் மனத்தைத் தாவிப்பிடித்துத்தடுத்து நிறுத்தும் வல்லமை அறநெறிக்கருத்துகளுக்கு எப்பொழுதும் உண்டு....மனிதனைப்பண்படுத்தவும்,பக்குவப்படுத்தவும்,சிந்தனையை பகரவும்,கொடைக்குணத்தைக் கொள்ளவும்,தீமைவிலக்கி  நன்மை பெருக்கவும் பெரியவரை மதித்துச்சீருடன் வாழும்  தகைமையையும்,நூல்கள் அழகுற  இயம்புகின்றன....சங்கம் முதல் இணையம் வரை,விளம்பரக்கலைச்சொற்கள்,மணிமேகலையின் தனித்துவங்கள்,செம்மொழியும் மணிமேகலுயும் போன்ற  ..15 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவரும் திருமதி முனைவர் கனகலட்சுமி மேடம் அவர்களின் அன்புத்தோழியுமான திருமதி முனைவர்.

இரா.விஜயராணி

இணைப்பேராசிரியர், முதுகலைத்தமிழாய்வுத்துறை,பிஷப்ஹீபர் கல்லூரி, மேடம் அவர்களை  திருச்சி பிஷப்ஷீபர் கல்லூரியில் சந்தித்ததில் பெருமகிழ்வு...அவர்கள் குழந்தைகள் பாராட்டி பரிசு வழங்கியது அதைவிட மகிழ்வு....

No comments:

Post a Comment