https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Monday, August 27, 2018

மகிழ்ச்சியாக இருங்கள்...

முழுமையாக அந்தநொடியில்  வாழுங்கள் !!
“அந்த நொடியில்  மகிழ்ச்சியாக இருங்கள்  அது போதும் .நமக்குத் தேவையானதெல்லாம் அந்த ஒவ்வொரு நொடி மட்டும் தான்
அதற்கு மேல் இல்லை -அன்னை தெரசா.............
14/08/2018  செவ்வாய் கிழமை  திரு குமார் சகோதரர்  அவர்கள் எம் பள்ளிக்கு வருகைப்புரிந்தார் ...தத்தி தத்தி  முதல் அடி எடுத்து வைக்கும்  குழந்தையைப்பார்த்த உடன் யாருடைய குழந்தை  என்ற பாரபட்சமில்லாமல் ஆகா! அருமையாக நடந்து விட்டாயே...நீ பெரிய ஆளாகி விட்டாயே செல்லமே... என்றெல்லாம் மனதாரபாராட்டத்தோன்றும் ..அந்தக்குழந்தையும் அதனைப்புரிந்துக்கொண்டு பெருமையாக அடுத்த அடியை எடுத்து வைக்க முயலும் .....அந்த சின்னஞ்சிறு
பாராட்டுகள்  மூலமாகவே குழந்தை ஒவ்வொரு காரியமாக  செய்து வளர்ந்து வருகிறது ...நம்முடைய மனம் திறந்த  நேர்மையான பாராட்டை குழந்தை விரும்புகிறது ...அப்படித்தான் குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாடு,மழலைப்பேச்சு...
அவர்களின் எண்ண வெளிப்பாடு ஒவ்வொன்றையும் ரசித்து பாராட்டி, மகிழ்ந்த   திரு குமார் சகோதரர் அவர்கள் அன்று முழுவதும் குழந்தைகளுடன்   ................இருந்து ....அவர்களுக்கு  இனிப்புகளை  வழங்கி  மகிழ்ந்தார் .....,,,பள்ளிக்கு Tablet for Android with Detachable  keyboard. வழங்கி,பணத்தினால் வாங்க முடியாத பரிசான அன்பைப்பெற்றார் ....         Thank you Thiru Kumar brother

விருதுகளை அள்ளிய குறும்படம் முதலிடம் நோக்கி ,...

விருதுகள் அள்ளிய
“ திருச்சி” குறும்படம்
பொது இடங்களில்  குப்பை இல்லாத நகரமாகவும் , தேசிய அளவில்  குப்பைகள் இல்லாத மாநகராட்சியாகவும்  திருச்சி மாநகராட்சியை மாற்ற வேண்டும்  என்ற நோக்கில்  முதலிடம்  நோக்கி என்ற குறும்படம்  தயாரிக்கப்பட்டு  சினிமா தியேட்டர்கள்  மட்டும் இன்றி யூடியூப்,, பேஸ்புக் ஆகிய சமூக வளைதளங்களிலும்  வெளியிடப்பட்டது ..உலக அளவில் பேசப்பட்ட. ... “96 நாட் அவுட் “. என்ற குறும்படத்தை இயக்கிய  திருச்சி ஆருத்ரா இந்த குறும்படத்தை இயக்கினார் ...
இது வரையில் 3 கோடி பேர் பார்த்துள்ளனர்..ஒரு விழிப்புணர்வு குறும்படத்தை இத்தனை கோடி பேர் சமூக  வலைத்தளத்தில் பார்த்தது இதுவே முதல் முறை....
மொத்தம் 15 விருதுகளைப்பெற்று உள்ள இந்தப்படம் , தேசிய அளவில்  நடந்து வரும் தூய்மை இந்தியா இயக்கத்திட்டத்தில்  சிறந்த விழிப்புணர்வு குறும்படமாகவும்  இதை தேர்வு செய்து உள்ளனர் ...திருச்சி மாநகரில்  10 தியேட்டர்களில் 4 காட்சிகளின்  இடைவேளையிலும்  தொடர்ச்சியாக150 நாட்கள்  இந்த குறும்படம்  திரையிடப்பட்டது ....படம் வெளியாகி 200 நாட்கள் ஆனதையொட்டி மாநகராட்சி சார்பில் விழா கொண்டாடப்பட்டது ....விழாவில்  குறும்படத்திற்கு உதவிய அனைவருக்கும் மாநகராட்சி ஆணையர்  அவர்களால்
நினைவுப்பரிசு வழங்கப்பட்டது
நன்றி:இயக்குனர் ஆருத்ரா அவர்களுக்கு.....

Wednesday, August 22, 2018

சுதந்திர தினம் 2018

Our  school children participated in the dancing competition in Tiruchirappalli corporation.Dancing helps keep our bodyphysically fit and healthy. Dance is good for our heart, lungs, and bones. It’s a fun way to stay active while increasing ourstrength, stamina, and flexibility..............................Dance also helps me to connect with ourmind, emotions, and spirit......................... Dance teaches survival skills...............Dancing teaches me tokeep going but wealso learn that a person never stops growing................Studies show that dancing can help to lose weight, stay flexible, reduce stress, make friends, and more.

மாற்றம் மாணவர்களிடம் இருந்து ......

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின்....மாணவர்களிடம்  இருந்து மாற்றம்....
(Students@clean city)....மாநகராட்சிப்
பகுதியில் உள்ள வீடுகளில் உற்பத்தியாகும்  மக்கும்/ மக்காத குப்பைகளை  தினந்தோறும் மாநகராட்சி வாகனம் மூலம் சேகரிக்கப்பட்டுகிறது ...........தரம் பிரித்து வழங்கினால்  மக்கும் குப்பை உரமாகவும் மக்காத குப்பை மறு சுழற்சிக்கும்  உட்படுத்தப்படுகிறது .எனவே அனைவரும்  குப்பைகளை தரம் பிரித்து வழங்கிட ஏதுவாக  வும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை  ஏற்படுத்தவும்  மாணவர்களிடையே மாற்றம் என்ற திட்டத்தை திருச்சி மாநகராட்சி அறிவித்தது ...அதன்படி 1.திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துக் கொண்டனர2.ஜூலை1ந்தேதி முன்னர் தூய்மை அட்டை பள்ளிகள் மூலம்வழங்கப்பட்டு மாணவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர் .3.ஜூலை
1-ந்தேதி முதல் 31 ந்தேதி
வரை  தினந்தோறும் குப்பைகளை தங்கள் வீட்டில் தரம் பிரித்து மாநகராட்சி பணியாளர்களிடம்  வழங்கிஅதற்கான கையொப்பத்தை வீட்டிற்கு குப்பைச்சேகரிக்க. வரும் துப்புரவு பணியாளரிடம் வழங்கவேண்டும்...4.ஆகஸ்டு
1-ந்தேதி தூய்மை அட்டையை  மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் வகுப்பாசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் 5.வகுப்பு ஆசிரியர்கள் 31. நாளும்தரம்பிரித்து வழங்கிய
தூய்மை அட்டையை போட்டிக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் 6.ஆகஸ்டு 6-ந்தேதி காலை வழிபாட்டில் அனைத்து மாணவர்களின் முன்னிலையில் 
மூன்று மாணவர்களின்  அட்டையினை குலுக்கல் முறையில் எடுக்க வேண்டும்
💐முதல் பரிசு 5000 மதிப்புள்ள மிதிவண்டி
💐இரண்டாம் பரிசு1000மதிப்புள்ள  கைக்கடிகாரம்
💐மூன்றாம் பரிசு 500 மதிப்புள்ள ஆக்ஸ்ஃபோர்டு  அகராதி...
வெற்றிப்பெற்ற  மாணவர்களுக்கு 15/08/21018 அன்று பரிசுகள் வழங்கப்பட்டன....இது ஒரு அருமையானத்திட்டம் ....,.......அனைவருக்கும் மக்கும் குப்பை
மக்காதக்குப்பையை பிரித்து அறிய கற்றுக்கொண்டனர்.....நன்றி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி

Monday, August 20, 2018

சுதந்திர தின விழா

கருணையுள்ள இதயம்
கடவுள் வாழும் இதயம்
💐💐💐💐💐அனைவரும் கற்று உணர வேண்டிய மூன்று சத்தியங்கள் ...பரந்த மனம் , அன்பான பேச்சு,சேவை வாழ்க்கை மற்றும்  கருணை ஆகியவைகளே மனிதம் மலரச்செய்யும்  மகத்தான செயல்கள் -புத்தர்
சுதந்திர தின விழாவிற்கு பரிசுகளை வாரி வழங்கிய நல்ல உள்ளங்கள்...
💐💐💐திரு ரவி சொக்கலிங்கம் அவர்கள் ...
💐💐💐 (என் முன்னாள் மாணவன் முரளி)திருமதி அகிலா முரளி  அவர்கள்
💐💐💐புங்கே இந்தியா பிரைவேட் லிமிடெட்
திரு சுந்தர் அவர்கள் ....
💐💐💐திரு அயினான் அவர்கள்
அனைவருக்கும் நன்றி

மத நல்லிணக்க உறுதிமொழி

மத நல்லிணக்க உறுதி மொழி...(20/08/2018). ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, இடைமலைப்பட்டிப்புதூர்,

Saturday, August 11, 2018

கதை சொல்லும் நிகழ்வு

💐💐💐💐💐இன்று பிற்பகல் ( 12/08/2018 )12.30
மணிக்கு News18 தொலைக்காட்சியில்  கதைசொல்லிதிரு ஜெயராமன் அவர்கள் ,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிப்புதூர் பள்ளி குழந்தைகளுடன்  நடந்த கதைச்சொல்லி நிகழ்வு ..... News 18 ..தொலைக்காட்சியில் இப்படிக்கு இவர்கள் நிகழ்வில்
காணத்தவறாதீர்கள் .....
நன்றி திரு ஜெயராமன் சார்
நன்றி News 18 தொலைக்காட்சி ....

வார்த்தை மாறாமல் வரிசை மாறாமல் விளையாடலாம் வாங்க........

வரிசைப்படுத்தி விளையாடலாம் .... வாங்க ..
💐💐💐💐💐நீதி நெறி விளக்கம்  இளமை , செல்வம் ,யாக்கை, நிலையாமை, கல்வியின் சிறப்பு ,செய்யக்கூடாத து இவற்றை அழகாக விளக்கும் பாடல் .இப்பாடலை இயற்றியவர் குமரகுருபரர்  அவர்கள் .... குமரகுருபரர் அவர்கள்  17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவர் ஆவார்.......
பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் அமைந்தது...........இவர்
எழுதிய நூல்கள்

கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
கயிலைக் கலம்பகம்
காசித் துண்டி விநாயகர் பதிகம் போன்றவை ஆகும் .
பாரதிதாசன் அவர்கள் குமரகுருபரர் மீது கொண்ட பற்றினால் தமது எதிர்பாராத முத்தம் என்ற நூலில் அவரைப் பற்றி குறிப்பிடுகிறார்......அவரது நீதி நெறி விளக்கப்பாடலில் இரு பாடல்கள் ஐந்தாம் வகுப்பு  குழந்தைகளில்  யார் முதலில் பாடலை வரி மாறாமல் , வார்த்தை மாறாமல்   வைக்கிறார்களோ அவர்களே வெற்றிப்பெற்றவர்கள் .... ஆர்வத்துடன்அனைவரும் பங்குப்பெற்றனர் .....ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிப்புதூர் , ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் ....