https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Sunday, December 23, 2018

கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பரிசு கொடுக்கும் வழக்கம் 10ம் நூற்றாண்டில்  தோன்றினாலும்  தொப்பையும் , குல்லாவும்  கொண்ட சான்டாகிளாஸ்  உருவம் 19 ம் நூற்றாண்டில்  தான்  உருவாக்கப்பட்டது .......
கொடுத்து மகிழவே...
பகிர்ந்து வாழவே...
ஏற்றுக்கொள்ளவே....
ஏற்றம் பெறவே......
ஒன்றுபடவே...,
நன்று வாழவே...
வென்று வளம்பெற...... கிறிஸ்துமஸ். நேற்றைய கிறிஸ்துமஸ் விழாவில்  அனைத்துகுழந்தைகளுக்கும்        (300)கடலைமிட்டாய்க் கொடுத்து மகிழ்ந்தவர் திரு ஜெயாவெங்கட் சகோ....
திருமதி அனிதா வெங்கட் அவர்களின் பிறந்த நாளில் எங்களை மகிழ்வித்து மகிழ்ந்த  உங்களுக்கு பள்ளியின் சார்பில் நன்றி .....

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

💐கிறிஸ்துமஸ்                                                  கொண்டாட்டம்💐
“நான்பசியாய் இருந்தேன்  எனக்கு உண்ணக் கொடுத்தாய்.
நான் தாகமாய் இருந்தேன்  எனக்கு குடிக்க கொடுத்தீர்கள்
நான் ஆடையற்று  இருந்தேன்  என்னை போர்த்தினீர்கள் .
நான் தனிமையில் இருந்தேன்  எனக்கு ஆதரவளித்தீர்கள் “.
என்ற இறைமகன்  இயேசு கிறிஸ்துவின் இனிய மொழிகளை இதயத்தில் ஏற்று இளையோர் உள்ளங்களில்  இரக்கம் பெருகவும், தருவதே இன்பம் என்ற தத்துவத்தை  மாணவர்கள் மனதில்  விதைத்து  இல்லார்க்கு ஒன்று ஈவதே ஈகை என்ற முதுமொழியை மாணவர்கள்  மனதில்  பதிக்கும்  வண்ணமாய் சமுதாயத்தில்  புறக்கணிக்கப்பட்ட  ஏழைகள் ஆதரவற்றோர், முதியோர்  மனநலம் குன்றியோர் ஆகியோரிடத்தில்  தங்கள் மகிழ்ச்சியை பகிர்தலே உண்மையான கிறிஸ்துமஸ் என்பதை மாணவர்களுக்கு  உணர்த்தும் வகையில்  அமைந்திருந்தது.....எங்கள்  பள்ளி கிறஸ்துமஸ் விழா ...இந்த ஆண்டின் கடைசி வேளை நாளான நேற்று ஆட்டம், பாட்டம் என மகிழ்ச்சியில் இருந்த  குழந்தைகளை கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து  மேலும் மகிழ்ச்சியில்  மூழ்கடித்தார் கன்மலை எடிசன் அவர்கள் ... நன்றி கன்மலை அறக்கட்டளை  எடிசன் ......

Tuesday, December 04, 2018

பின்னம்

பின்னம்.....
முழு  பொருள் தன்னில் பிரிக்கும் அளவை பின்னம் என்கிறோம்....
ஆப்பிள்,உருளைக்கிழங்கு,பெரிய வெங்காயம், கடலைஉருண்டை,ஆரஞ்சு, சப்பாத்தி, தோசை,தேன்மிட்டாய்,தேங்காய் பர்பி, போன்றவற்றை ஆறு,,ஏழு,எட்டு என சம பாகங்களாகப்வெட்டி,பிரித்து அவற்றைக்கொண்டு தொகுதி, பகுதி,தகுபின்னம்,தகாபின்னம்,கலப்பு பின்னம்,ஓரின பின்னம்,வேற்றின பின்னம்,
பின்னக்கூட்டல்,கழித்தல் அறிதல்......

புதிய பொலிவுடன் வகுப்பறை

மஞ்சள் வண்ணத்தில்  புதிய பொலிவுடன் வகுப்பறை....

கஜா புயல் நிவாரணம்

மகிழ்வான நாள்............ திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் திரு மருதநாயகம் அவர்கள்  தலைமையில்.2/12/2018 ஞாயிறு அன்று  #கஜாபுயல்# பாதித்த பகுதிகளான ,   புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமலைராய  சமுத்திரம் ஊராட்சி, மேட்டுப்பட்டி அருகே உள்ள உடையாநேரி,ரெங்கம்மாள் சத்திரம்,நார்த்தாமலை, பொம்மாடிமலை,இந்திராகாலனி, சமத்துவபுரம்,போன்ற  பகுதிகளுக்கு ரூபாய் 50 000 மதிப்பிலான நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டது... .....                .நிவாரணப்பணியில் சமயபுரம் எஸ் ஆர் வி மாணவர்கள் ( 11 ஆம் வகுப்பு) தன்னுடன் பயிலும் மாணவர்களிடம் நிதிவசூல் செய்து அப்பணத்தில் பொருள்களை வாங்கி களப்பணி ஆற்றியது குறிப்பிடத்தக்கது..... நிவாரணப்பொருள்கள் கைலி மற்றும்  தார் பாய் வாங்க ரூபாய் 10000  வழங்கிய        திரு  ரவி சொக்கலிங்கம்  அவர்களுக்கு நன்றி......

கஜா புயல் சான்றிதழ்

அங்கீகரிப்போம் .....
அன்பின் தூதர்களை ....
குழந்தை செல்வங்களின் சீரிய சிந்தனைகளை ...

சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இருக்கு .....
தனது ஆசை சேமிப்பை பகிர்வதற்கும் ,உண்டியல் ஏந்தி ,புயல் நிவாரண நிதி திரட்டி அளிப்பதற்கும் பெரிய மனசு வேண்டும் ..
அத்தகைய உயர்ந்த உள்ளத்தோடு ,கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தம் இள வயதிலே சேவை மனப்பான்மையுடன்
அறம் வழங்கியதை பாராட்டி
சான்றிதழ் வழங்கி பெருமை கொள்கிறோம் ......
இவர்களின் பெற்றோர்களும் ,ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே.......
குழந்தைகளைக் கொண்டாடுவோம்...
பாராட்டுவோம் ..அவர்களின் சேவையை....

பிறந்த நாள்

இன்று  பிறந்த நாள் காணும் Ashok Ignatious  ....அன்பர் பணி செய்ய
என்னை ஆளாக்கி விட்டு விட்டால்
இன்ப நிலைதான் வந்தெய்தும் பராபரமே!
பிறருக்குப் பணியாற்றுவது தான் பேரின்பம் என்கிற திருமூலரின் பாடலுக்கு ஏற்ப சிறிய வயதில் தொண்டு செய்யும் நீ பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்..

மகனின் பிறந்த நாள் விழா

அன்பு மகனே..
#தென்றல்
நீ பேசும் போது தென்றல் தோற்கும்.... தென்றலைக்காட்டிலும் உன்னுடைய சொற்கள் இதமாய்  இருக்கும்......
#பணிவு
உன்னிடம் பாடம் கேட்கும்........
#கனிவு
உன்னுடைய செயல்களோடு கைகொடுக்கும்...
# மனித நேயம்
உன்னிடத்தில்  உன் உருவத்தில் உருக்கொண்டிருக்கும்....
# மானுடம்
உன் முகவரியாய் முகிழ்த்துக்கொண்டேயிருக்கும்...
#நட்பு
தொண்டும்  தோழமையும் உன் நட்பு வட்டம்....
#உதவி
முகம் மறைத்துக்கொள்ளும் மனிதர்கள் மத்தியில் முணுமுணுக்காமல் முன் வந்து நிற்கும் குணம்...
#பக்தி
தாத்தா,பாட்டி
தாய்,தந்தையை வணங்கி என் தெய்வம் நீங்கள் என்று சொல்லும் அழகு....
#அறிவு
கலைமகள் உன்னிடத்தில் குடி இருப்பதால் எதிலும் முதலிடம்......
இன்று  பிறந்த நாள் காணும் ....25/11/2018
பா.நவின் கிஷோர்  வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ  வாழ்த்துகிறேன்..

கதை..ஒற்றுமையே பலம்

ஒற்றுமையே பலம்....  ........
.கட்டைவிரல்,சுட்டுவிரல்,
நடுவிரல்,
மோதிரவிரல், சுண்டு விரல்,
தங்களுக்குள் சண்டை செய்து தன்னை மறந்து  ஒன்று சேர்ந்த  கதை... ஒற்றுமையே பலம்...vth standard, Panchayat union primary school ,Edamalaipattipudur, Trichy-12