https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Sunday, October 28, 2018

மடங்குகள்

நூறுக்குள்ளே
நம்பர் ஒண்ணு
சொல்லு......
மடங்குகளை
காரணிகளைச் சொல்வேன்.....
கொடுக்கப்பட்ட எண்களுக்கு மடங்குகளையும், காரணிகளையும் கண்டறிந்த மாணவ/ மாணவிகள்...  v th std
Panchayat union primary school
Edamalaipattipudur
Trichy-12

Saturday, October 27, 2018

Circus... circus

மற்றவர் மகிழ்ந்திட
கற்றவர் வியந்திட
பெற்றவர் அதிர்ந்திட
உற்றதோர் சாகச சர்க்கஸ்!
எரியும் தீயில்
நுழைந்து வந்தால்தான்
எரியும் அடுப்பு இவர் வீட்டில்!
வளையத்துக்குள் நுழைந்து வெளியேறத் தெரிந்த இந்தக் கழைக்கூத்தாடிகளுக்கு வறுமையிலிருந்து வெளியேறத்தெரியாது!இவர்கள் அடிக்கும் மேளம்கூட தாளம் தப்பாகப் போடுகிறது!
மங்களோசை !அவை ஒருபோதும் எழுப்புவதே இல்லை!
இவர்கள் தடுமாறாமல் நடக்கிறார்கள்
கம்பிலும் கம்பியிலும் ,
ஆனால் வாழ்க்கையில் தடுமாறிக்கிடக்கின்றார்கள்!
வித்தைகாட்டவேப் பள்ளிகளுக்குச்செல்லும் இவர்கள்
வித்தை கற்க இப்போது தம் பிள்ளைகளை பள்ளியின்பக்கம் அனுப்பத் தொடங்கியுள்ளனர்!ஒருசான் வயிற்றுப்பாட்டுக்கு
கயிற்றிலாடும் இவர்கள் கைத்தட்டில் எழும் ஒலியைவிட
இவர்கள்
கைத் தட்டில் விழும்
சில்லரை ஒலியே மகிழ்விக்கும்!
இன்று எம்பள்ளி மாணவர்கள் கண்களுக்கு விருந்தாகவும்
என் கண்களுக்கு நீர் வார்த்த நிகழ்வாகவும்
இருந்த சர்க்கஸ்,சர்க்கஸ்
இருக்கவேண்டுமா!
என்ற இறுக்கம் என்னுள் எப்போதும் இருக்கும்!

Wednesday, October 24, 2018

பள்ளி பார்வையின் போது

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திருச்சிமாவட்டஒருங்கிணைப்பாளர் திருமிகு பாரி அவர்களும் , மணிகண்டம் ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திருமதி. ஜோதியம்மாள் அவர்களும் எம் பள்ளியைப் பார்வையிட்டு பாராட்டிய நிகழ்வு இன்று ..........

Wednesday, October 17, 2018

அனைவருக்கும் பாதுஷா

உதய நாளில்
இதயம் மகிழ
உவந்தே அளித்தார்
பாதுஷா
பாதுஷாவைப் பார்த்ததுண்டு
சுவைத்ததில்லை
அந்த ஏக்கம் தீர்த்திடவே
வந்ததின்று எங்களுக்கே
பிள்ளைகள் யாவரும் பெற்றனர் பாதுஷா
எல்லைகள் இல்லா சுவையுடன் ,அன்புடன்
நன்றியை அள்ளி வழங்கினர்
நன்றி :திரு சுரேஷ் சந்திரன்
ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிபுதூர்

மகிழ்ச்சி...நெகிழ்ச்சி

மகிழ்ச்சி.... நெகிழ்ச்சி....
இன்று திருநெல்வேலி முகநூல் தோழி திருமதி Indira Selin அவர்கள் ....... ஓடி வந்து தன் அன்பை வெளிப்படுத்திய மகிழ்வான தருணம் .... நன்றி தோழி. .......

காந்தியடிகள்

அக்டோபர் 2 ல் பிறந்தவரே.         
போர் பந்தரில், தவழ்ந்தவரே..
போர்க்குணம் ஒழித்த, புண்ணியரே.
கதரை ராட்டையில், நெய்திட்டவரே
கள்ளுண்ணாமையை,        முழங்கிட்டவரே தண்டியாத்திரை செய்தவரே.
தன்னலம் இன்றி வாழ்ந்தவரே. அஹிம்சை வழியில், நடந்தாயே.
அண்ணல் காந்தி ஆனாயே.
சத்யாகிரஹத்தால்  சுதந்திரத்தை,  சாதித்துத் தந்த மகாத்மாவே.. ...........
பாசச் சிந்தையால் பவனி வந்த, தேசத்தந்தை மகாத்மாவே.   பதிப்போம் உன் வழி
பாரினிலே ........
உள்ளத்தில் தூய்மை
செயலில் தூய்மை
பேச்சில் தூய்மை  பெற்று வாழ்ந்ததால்  தான்  காந்தியடிகளால் “ எனது வாழ்க்கையே நான் கூறும் செய்தி” என்று கூற முடிந்தது .
மகாகவி அவர்கள்
வாழ்க ! நீ எம்மான் இந்த
வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக்கெட்டு
பாழ்பட்டு நின்ற   
தா மோர்
பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மஹாத்மா நீ வாழ்க ! வாழ்க !என்றார். ...........
நம்மை வாழ்விக்க வந்த வித்தகர்  தனது வாழ்க்கை வரலாறு மூலம் இன்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றார் ..............

ஜூன் முதல் நாள்..

இன்று பள்ளி துவங்கியாச்சு....

பாட புத்தகம் தந்தாச்சு.......

படிக்க நாங்களும் வந்தாச்சு...

ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி
இடைமலை ப்பட்டிபுதூர்
மணிகண்டம் ஒன்றியம்
திருச்சிராப்பள்ளி -620012

மணிவிழா

சிரித்து ஈர்த்தாள்
மேனியில் முத்தமிட்டு
மழை...

மழையோடு இன்று.....
மணிவிழா காணும் ....

எம்பள்ளியின் ஆசிரியர்
திருமதி க கு.ராஜஷீலா து.மாரியப்பன்  தம்பதியினர்

அவர்கள் ... அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துவோம்

மாநகராட்சியின் மக்கள் திருவிழா

"இயற்கை திருவிழா" இது "மக்கள்திருவிழா"

குப்பைகளை உரமாக மாற்றும் செயல்முறை விளக்க பொருட்காட்சி .

வீட்டிலேயே மக்கும் குப்பைகளை  உரமாக மாற்றுவது எப்படி ?  என்பது பற்றிய உங்கள் அனைத்து  கேள்விகளுக்கு விடை சொல்லும் வகையில் பொருட்காட்சியானது வரும் அக்டோபர் 6 மற்றும் 7 ஆம் தேதி திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் "இயற்கை திருவிழாவாக " நடைபெற இருக்கிறது.
இதில் சுமார் 40 இந்திய நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் அவர்களின் வெவ்வேறு விதமான சாதனங்களின் மூலம் பலவிதமான வழி முறைகளில் மூலமாகவும் எவ்வாறு மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவது என்பது பற்றிய  செயல்முறை விளக்கங்களுடன் கூடிய பொருட்காட்சியானது மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .. இதில் அனைவரும் கலந்து கொண்டு குப்பைகளை எளிதாக உரமாகவும், எரிபொருளாகவும் மாற்றும் வழிமுறைகளை  அறிந்து கொள்ள முடியும். *சுற்றுச்சூழல் காவலனாக* மாற்றம் பெற இந்த பொருட்காட்சி பயனுள்ளதாக அமையும்.பள்ளி, கல்லூரி மாணவர்கள்,வீட்டுத்தலைவிகள், நிறுவனங்கள், ஹோட்டல் உரிமையாளர் என பொதுமக்கள் அனைவரையும் இதில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் ......பயனுள்ள  பொருட்காட்சி ...............,..மாநகராட்சி ஆணையர் அவர்களுடன்....பள்ளி மாணவிகள் ...,,
#homecomposti

ஓலைச்சுவடி

பழமை போற்றுதல்
பனையை காத்தல்.........

மண்ணின் முதல் காகிதம்........

எழுத்தானியின்
இணையில்லா தோழன்........
ஒழிக்கப்பட்ட சுவடியை,
நினைவில் கொணர்ந்து...

வள்ளுவன் வகுத்த,     நெறியைக்  குறித்து,   மனதில் பதிக்க தீட்டிய செயல்,..... மலைப்போ மலைப்பு. ......
அழகோ அழகு.......
           
குழந்தைகளின் செயல்பாடுகள் சிறப்போ சிறப்பு.👍🏽பனையோலை எழுத்துப் பணியினை நினைக்கும் புதுமைத் திட்டம். 

மனயாழை மீட்டி வள்ளுவனைப் போற்றி  வளர்த்திடுவோம் தாய்மொழி.💐வாழும் மாந்தர்கள் வழுவாமல் இருப்பதற்கு
திருக்குறளை
போல் உண்டா?
வள்ளுவன் மொழியி னை வையமே பேசிடும்.... உள்ளம் புறமும் தமிழ்மனம் வீசிடும்.....    Panchayat union primary school ,Edamalaipattipudur, Trichy_12

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்
       பள்ளியில் சர்வ தேச பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 200  பெண்  குழந்தைகளுக்கு  இரத்தவகை கண்டறியப்பட்டது.Lions club of Trichirappalli,
PREMIER PRIDE தலைமையில் நடை பெற்ற இந்த விழாவில் தலைவி திருமதி பிரேமா பாலகிருஷ்ணன்,  அவர்களும்பொருளாளர் திருமதி சுவர்ணா சங்கர்,அவர்களும் செயலர் திருமதி சாந்தி சுகுமார்  அவர்களும்  கலந்து கொண்டனர் ...  
Panchayat  union primary school
Edamalaipattipudur 
Trichy-12
Thank you lions club of
Trichirappalli
Premier pride