https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5WZRmcMxsusv_VaFFc-aroPsJxpPzPdkJgCs_k6zlLQhOFKvSxKy_a1ZDxy70qO6ji3s_dEFpjnhvlumFFjqtBj8xQsZ7t6M-AqJA04GYoGijFPrRNAeVtiM1toYYm1-SrrdnJQQihUeU/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Wednesday, October 17, 2018

காரைக்குடி கவியரசனார் விழா

மகிழ்ச்சி..........

கனல் கக்கும் சொல்லாலே கவி வடித்தப் பாவலன்
புனல் போலப் பாய்ந்தோடும் புதுக்கவியின் காதலன்!
மணல் போல பல கவிகள்
மண்மீது வந்தாலும்
தணல் போன்றத் தன் நடையால்
தமிழனத்தின் அறியாமை
தனைநீக்கியக் பகலவன்!
முடியரசனார் எனும் கவிக்கு
நேர்மைப் போராளி
வாய்மையே வெல்லும் என
வாழ்ந்துகாட்டும் தூயவர்
சகாயம் இஆபா அவர்களின் தலைமையில்
தமிழாய்ந்த அவைக்களம் எடுத்தத்
தனிப்பெரும் தமிழ் விழாவில்
காரைக்குடியேக் கைதட்ட
நினைவுப் பரிசு பெற்ற நிகழ்வதும் நீங்காது நெஞ்சிலே நிற்கிறதே!
முடிசூடாக் கவிமன்னன்
முடியரசன் விழாவினிலே
பிடி ஓர் விருதென்றேப்
பிரியமுடன் அழைத்தோருக்கு நன்றி!நன்றி!காரைக்குடி யிலோர் கவி விழா
ஊரை வியக்கவைக்கும் ஒரு விழா
முடியரசன் எனும் கவிக்கு
முத்தமிழ் எடுத்தத் திருவிழா
ஆன்றோர் பலர் கூட
சான்றோர் நடுவினிலே
நேர்மைப் போராளி,
நெஞ்சுரம் கொண்டே
லஞ்சம் தவிர்ப்பவர்,
சகாயம் ஐ ஏ எஸ் இன்
திருக் கரத்தால் பரிசு பெற்றுத்
திரும்பினர் எம் பிள்ளைகள்.
அன்புடனே வாய்ப்பளித்த அவைக் களத்திற்கு எம் நன்றி
அருகிருந்து துணைசெய்த
ஆருயிர்த் தோழிகள்
வனிதாராணி, முருகேஸ்வரிக்கும்
வளர்தமிழ் என் நன்றி.

No comments:

Post a Comment