https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Tuesday, October 16, 2018

இளைஞர் எழுச்சி நாள்

சாதனை செய்திடும் சாரணர் இயக்கமும்
சேவையை உணர்த்திடும் செஞ்சிலுவை அமைப்பும்
இனிதாய் உதயம் இடைமலைப் பட்டிபுதூர்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
இனியென்னக் குறை
இமயமும் எமக்கு சிறு குன்றே!
பாடும் பறவையாய்
பாயும் குருளையாய்
எம் பிள்ளைகள்
சீறுடை அணிந்த
சிறுவர் கூட்டம்
காணக் கண்கள் ஆயிரம் வேண்டும்......
. 15.10.18 .முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ - அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது' திருச்சி மாவட்டம், மணப்பாறை கல்வி மாவட்டம் , மணிகண்டம் ஒன்றியத்தில், திருச்சி மாவட்டத்திலேயே முதல் முறையாக ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் சாரண இயக்கத்தின் குருளையர் பிரிவும் | நீலப் பறவையர் பிரிவும் தொடங்கப்பட்டது. 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாண வியர் இதில் இடம் பெற்றுள்ளனர். இடை மலைப் புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இன்று பிற்பகல் திருச்சி மண்டல சாரண ஆணையர் முனைவர் ஜம்ஷித் மொகைதீன்    அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 10 மாணவர்களுக்கு சீருடை சாரோன் தொண்டு நிறுவனம் முலமாக திரு. தன் ராஜ் அவர்களால் வழங்கப்பட்டது. விழாவில் சாரண ஆசிரியர் திரு இளம்வழுதி கலந்துகொண்டு பயிற்சி அளித்தார். பிஷப் ஹீபர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் திரு அன்புராஜ் அவர்கள் அப்துல் கலாம் வாழ்க்கையை பற்றி விளக்கிக் கூறினார்கள். காவல்துறையைச் சார்ந்த திருமதி கவி செல்வா அவர்கள் மாணவர்களுக்கு எழுச்சி உரை நிகழ்த்தினார்கள். பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி  முருகேஸ்வரி அவர்கள் மாணவர்களுக்கு பண்பு, ஒழுக்கம் பற்றி கருத்துரை வழங்கினார்கள். இப்பகுதியின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் திரு முத்துச்செல்வம் அவர்கள் பரிசுகள் வழங்கி பாரட்டுரை வழங்கினார்கள்' இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முனைவர் மணிவண்ணன் அவர்கள் இப்பள்ளியின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்கள். விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் திருமதி  அருணாதேவி,திரு மருதநாயகம், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் திரு மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினர்....
நன்றி  திருமதி கவிசெல்வா,திருமதி முருகேஸ்வரி. 
Panchayat union  primary  school, Edamalaipattipudur,  Trichy-620012

No comments:

Post a Comment