https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Wednesday, July 01, 2020

Covid-19

சரியான நேரத்தில் எளியவர்களுக்கு உதவுதல்..

கொரோனா  ஊரடங்கு காரணமாக, பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல், வீடுகளில் முடங்கியுள்ளனர்.இடமலைப்பட்டி புதூர் பள்ளியில் படிக்கும் மிகவும் வறிய நிலையில் இருக்கும் பெற்றோர்களுக்கு ..... 100 குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியில்
முதல் 
கட்டமாக 30  குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப்
பொருட்கள் நேற்றைய(4/4/2020) தினம் வழங்கப்பட்டது ...வரும் வாரத்தில் மேலும் குடும்பங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.!!  சரியான நேரத்தில் ஏழைகளுக்கு வழங்குவதால் அவர்களுக்கு பயன் உள்ளதாக உள்ளது...கேட்டவுடன் மகிவித்து மகிழ்ந்த S2S திரு இரவி சொக்கலிங்கம்  அண்ணா அவர்களுக்கு நன்றி .. நன்றி 








Covid-19

சரியான நேரத்தில் எளியவர்களுக்கு உதவுதல் தொடரும் நிகழ்வு....

கொரோனா  ஊரடங்கு காரணமாக, பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல், வீடுகளில் முடங்கியுள்ளனர்....அன்றாடம் பணிக்குச் சென்றால்  தான்  உணவு என்ற நிலையில் இருக்கும் ... மிகவும் வறிய நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு  ஆதரவளிக்கும் முயற்சியில்
இரண்டாவது
கட்டமாக மீண்டும் 
30  குடும்பங்களுக்கு திருச்சி  உலகனாதபுரத்தில் அரிசி உள்ளிட்ட மளிகைப்
பொருட்கள் இன்றைய (6/4/2 0)தினம் வழங்கப்பட்டது ...வரும் வாரத்தில் மேலும் குடும்பங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.!!  சரியான நேரத்தில் ஏழைகளுக்கு வழங்குவதால் அவர்களுக்கு பயன் உள்ள வழியில் இருக்கிறது...
... கேட்டவுடன்  மகிவித்து மகிழ்ந்த S2S திரு இரவி சொக்கலிங்கம்  அண்ணா அவர்களுக்கு நன்றி .. நன்றி...நன்றி..



Covid-19

கோவிட் - 19 விழிப்புணர்வு களப்பணியில்
திருச்சி அண்ணா விளையாட்டரங்கச் சாலையில் மாநகராட்சி சார்பாக ஏற்பாடு செய்துள்ள காய்கறி சந்தைப் பகுதியில் மாநகரக் காவல்துறையுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு ஒழுங்கு நடவடிக்கை களப்பணியில் இருந்து இனிய பதிவுகள். 

காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை களத்தில் .. என்னுடன் தம்பி சதீஷ் குமார் மற்றும் Scout சாமுவேல் உள்ளிட்ட காவல் நண்பர்களுடன் .. 06.04.2020.   



Covid-19

அண்ணா விளையாட்டரங்கச் சாலையில் நடைபெறும் மார்க்கட் பகுதியில்.. கொளுத்தும் வெயிலிலும் பரிவுடன் கனிவுடன் விழிப்புணர்வு ஒழுங்கு நடவடிக்கை பணியாற்றிடும் பொழுதில் தோழர்களுடன் இனிய தற்படம். ஆறாம் நாள் ..09.04.2020.  





Covid-19

மகிழ்வித்து மகிழ்வோம்...
கொரோனா  ஊரடங்கு காரணமாக, பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல், வீடுகளில் முடங்கியுள்ளனர்....அன்றாடம் பணிக்குச் சென்றால்  தான்  உணவு என்ற நிலையில் இருக்கும் ... மிகவும் வறிய நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு  ஆதரவளிக்கும்  வகையில் இன்று 5 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது...நன்றி கணேஷ் கலாம்.   



Covid-19

அண்ணா விளையாட்டரங்கச் சாலையில் நடைபெறும் மார்க்கட் பகுதியில்.. கொளுத்தும் வெயிலிலும் பரிவுடன் கனிவுடன் விழிப்புணர்வு ஒழுங்கு நடவடிக்கை பணியாற்றிடும் பொழுதில் தோழர்களுடன் இனிய தற்படம். ஏழாம் நாள் ..10.04.2020. 





விகடன் செய்தி..covid-19

எங்க மேலயும்  கொஞ்சம்https://www.vikatan.com/news/tamilnadu/karur-transgenders-seek-governments-help?utm_source=mobile&utm_medium=whatsapp கருணை காட்டுங்கள்...
விகடன்  செய்தி அறிந்து....உடன் கரூர் மாவட்ட ஆசிரியர்களிடம் தொடர்பு கொண்டு இன்று காலை  உடனடியாக அவர்கள் 30 பேருக்கும்  அரிசி வழங்கிய அண்ணன் திரு இரவி சொக்கலிங்கம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்....நேற்று மாலை செய்தியை பார்த்து அவர்களுக்கு உடனடியாக உதவ வேண்டும் என்று அன்பு கட்டளையிட்ட  அண்ணன் அவர்கள் 30 பேருக்கும் 5 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்தார்...இதற்க்கு உதவிய கரூர் மாவட்ட ஆசிரியர் ஐயா செல்வகண்ணன் அவர்களுக்கும் திரு அன்பரசன் அவர்களுக்கும் மற்றும் திருமதி sai brindha  அவர்களுக்கும் நன்றி  நன்றி