https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Wednesday, August 22, 2018

மாற்றம் மாணவர்களிடம் இருந்து ......

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின்....மாணவர்களிடம்  இருந்து மாற்றம்....
(Students@clean city)....மாநகராட்சிப்
பகுதியில் உள்ள வீடுகளில் உற்பத்தியாகும்  மக்கும்/ மக்காத குப்பைகளை  தினந்தோறும் மாநகராட்சி வாகனம் மூலம் சேகரிக்கப்பட்டுகிறது ...........தரம் பிரித்து வழங்கினால்  மக்கும் குப்பை உரமாகவும் மக்காத குப்பை மறு சுழற்சிக்கும்  உட்படுத்தப்படுகிறது .எனவே அனைவரும்  குப்பைகளை தரம் பிரித்து வழங்கிட ஏதுவாக  வும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை  ஏற்படுத்தவும்  மாணவர்களிடையே மாற்றம் என்ற திட்டத்தை திருச்சி மாநகராட்சி அறிவித்தது ...அதன்படி 1.திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துக் கொண்டனர2.ஜூலை1ந்தேதி முன்னர் தூய்மை அட்டை பள்ளிகள் மூலம்வழங்கப்பட்டு மாணவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர் .3.ஜூலை
1-ந்தேதி முதல் 31 ந்தேதி
வரை  தினந்தோறும் குப்பைகளை தங்கள் வீட்டில் தரம் பிரித்து மாநகராட்சி பணியாளர்களிடம்  வழங்கிஅதற்கான கையொப்பத்தை வீட்டிற்கு குப்பைச்சேகரிக்க. வரும் துப்புரவு பணியாளரிடம் வழங்கவேண்டும்...4.ஆகஸ்டு
1-ந்தேதி தூய்மை அட்டையை  மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் வகுப்பாசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் 5.வகுப்பு ஆசிரியர்கள் 31. நாளும்தரம்பிரித்து வழங்கிய
தூய்மை அட்டையை போட்டிக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் 6.ஆகஸ்டு 6-ந்தேதி காலை வழிபாட்டில் அனைத்து மாணவர்களின் முன்னிலையில் 
மூன்று மாணவர்களின்  அட்டையினை குலுக்கல் முறையில் எடுக்க வேண்டும்
💐முதல் பரிசு 5000 மதிப்புள்ள மிதிவண்டி
💐இரண்டாம் பரிசு1000மதிப்புள்ள  கைக்கடிகாரம்
💐மூன்றாம் பரிசு 500 மதிப்புள்ள ஆக்ஸ்ஃபோர்டு  அகராதி...
வெற்றிப்பெற்ற  மாணவர்களுக்கு 15/08/21018 அன்று பரிசுகள் வழங்கப்பட்டன....இது ஒரு அருமையானத்திட்டம் ....,.......அனைவருக்கும் மக்கும் குப்பை
மக்காதக்குப்பையை பிரித்து அறிய கற்றுக்கொண்டனர்.....நன்றி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி

No comments:

Post a Comment