https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Monday, August 27, 2018

விருதுகளை அள்ளிய குறும்படம் முதலிடம் நோக்கி ,...

விருதுகள் அள்ளிய
“ திருச்சி” குறும்படம்
பொது இடங்களில்  குப்பை இல்லாத நகரமாகவும் , தேசிய அளவில்  குப்பைகள் இல்லாத மாநகராட்சியாகவும்  திருச்சி மாநகராட்சியை மாற்ற வேண்டும்  என்ற நோக்கில்  முதலிடம்  நோக்கி என்ற குறும்படம்  தயாரிக்கப்பட்டு  சினிமா தியேட்டர்கள்  மட்டும் இன்றி யூடியூப்,, பேஸ்புக் ஆகிய சமூக வளைதளங்களிலும்  வெளியிடப்பட்டது ..உலக அளவில் பேசப்பட்ட. ... “96 நாட் அவுட் “. என்ற குறும்படத்தை இயக்கிய  திருச்சி ஆருத்ரா இந்த குறும்படத்தை இயக்கினார் ...
இது வரையில் 3 கோடி பேர் பார்த்துள்ளனர்..ஒரு விழிப்புணர்வு குறும்படத்தை இத்தனை கோடி பேர் சமூக  வலைத்தளத்தில் பார்த்தது இதுவே முதல் முறை....
மொத்தம் 15 விருதுகளைப்பெற்று உள்ள இந்தப்படம் , தேசிய அளவில்  நடந்து வரும் தூய்மை இந்தியா இயக்கத்திட்டத்தில்  சிறந்த விழிப்புணர்வு குறும்படமாகவும்  இதை தேர்வு செய்து உள்ளனர் ...திருச்சி மாநகரில்  10 தியேட்டர்களில் 4 காட்சிகளின்  இடைவேளையிலும்  தொடர்ச்சியாக150 நாட்கள்  இந்த குறும்படம்  திரையிடப்பட்டது ....படம் வெளியாகி 200 நாட்கள் ஆனதையொட்டி மாநகராட்சி சார்பில் விழா கொண்டாடப்பட்டது ....விழாவில்  குறும்படத்திற்கு உதவிய அனைவருக்கும் மாநகராட்சி ஆணையர்  அவர்களால்
நினைவுப்பரிசு வழங்கப்பட்டது
நன்றி:இயக்குனர் ஆருத்ரா அவர்களுக்கு.....

No comments:

Post a Comment