https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Sunday, April 07, 2019

ஆண்டு விழா 2018..சீர் வரிசை

அர்த்தம் தந்த நாள் இது...


சென்ற வாரம் , சென்ற நாட்களில், 

அர்த்தம் தந்த நீண்ட மணித்துளிகள் இவை. 

சென்றது என்னவோ, சில மணித்துளிகள் மட்டும் சிந்தத் தான். ஆனால் செலவழித்தது என்பது அன்றைய மாலையின் பெரும்பகுதி. 

திரும்பி வர மனம் இல்லாமல், அல்லது திருப்பி அனுப்ப மனம் இல்லாமல் கட்டிப் போட்ட , சுட்டிகள் செய்த மாயம் அது. 

புதிதாய் சேர்ந்த குட்டிக்குழந்தைகளின் ஊர்வலம், வரவேற்பு, திலகம் இட்டு வாழ்த்துகள்,ஊர் மக்களின் பள்ளிச்சீர், வரவேற்பு வாத்தியம், ஆரத்தி , சந்தனம், மாலைகள் என்று ஒரு குடும்ப விழா வாக , ஒரு ஊர் திருவிழா வாக, ஒரு சிறு அரசு துவக்க பள்ளியின் ஆண்டு விழா இருக்குமா? என்று அதிசயப்பட்ட விழா வாக மனதில் நின்ற நிகழ்வு இது. 

பள்ளி ஆசிரியர்களின் கடும் அர்ப்பணிப்பையும், மாணவ மாணவிகளின் பெரும் திறமையையும் , நண்பர்களின் அன்பையும் கண்டு மகிழ்ச்சி. 

காலத்தை கட்டிப் போடும் வித்தை , இந்த குழந்தைகளுக்குத்தான் அதிகம் தெரிகிறது. கணக்கில்லா திறமைகளை தன்னுள் ஒளித்து வைத்திருப்பதால். 

இனி வரும் காலங்களில் இணைந்து ஆதரவை , அவர்களுக்கு தொடரும் நம்பிக்கையுடன் , மனதின் நெகிழ்ச்சி. 

நன்றிகள் பல. 

எடமலைப்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளி., 

பள்ளி கல்வி அலுவலர், தலைமை ஆசிரியை ,ஆசிரியைகள், பள்ளிக்குழந்தைகள், மற்றும் தோழி ஆசிரியை லதா பாலாஜி அனைவருக்கும் .

No comments:

Post a Comment