https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Saturday, September 28, 2019

உலக சாதனை நிகழ்வு பனை

உலக சாதனை நிகழ்வு.....(22/09/2019) பனையைக்...
காப்போம்

பனையே முது பெரும் பனையே 
உன்னை நீர் ஊற்றி வளர்க்கவில்லை 
நிலத்திற்கு பசளை இட்டதில்லை 
நிரை நிரையாய் வளர்வதற்கு 
உன் விதையை ஊன்றி விட்டனர் மக்கள் 
அதுவும் தங்கள் வயலின் 
எல்லையைக் காப்பதற்கு .....
மக்கள் எதிலும் சுயநலம் ....ஆம்

ஆனால் சுயநலமே இல்லாத 
பனைமரம் நீ... உன்னால் 
நாங்கள் அடையும் பயன் 
எண்ணற்றவை பனை என்றால் 
பனை காடு என்றால் இழிவாகவும் 
எளிமையாகவும் நினைப்பதுண்டு 
ஏன்/ எல்லாம் உன்னிடம் இருந்தும் 
உன்னிடம் கிளைகள் இல்லையே 
உன்னிழலில் தங்க இடம் இல்லையே , 

நெடு நெடுவென்று வளர்ந்து 
உச்சியிலே ஒரு முடியைப் போல் 
அழகான குருத்தோலை காவோலை 
குண்டு குண்டு பழங்கள் எல்லாமே 
அத்தனையும் மக்கள் தேவைக்கு 
ஏற்றாப் போல் தலையாலே சுமக்கின்றாய் 

அண்ணார்ந்து பார்த்தால் ஆச்சரியம்தான் 
எவ்வளவு உயரம் கன்னங் கரேலென்று 
எதற்கும் அச்சமின்றி வளர்ந்து நிற்கின்றாய் 
உன்னால் மக்கள் அடையும் பயன்கள் நிறைய 
கற்பகம் எனும் அழகிய பெயர் 
உனக்கு மிகவும் பொருத்தமே
எத்தனை புயல் அடித்தும் பனை வீழ்ந்ததாக 
சரித்திரமே இல்லை 

அத்துணை உறுதி உன்னிடம் 
நீ நிலைத்தாலும் ஆயிரம் 

ஏன்/ எல்லாம் உன்னிடம் இருந்தும் 
உன்னிடம் கிளைகள் இல்லையே 
உன்னிழலில் தங்க இடம் இல்லையே , 
----ஆம் உண்மை 
ஒற்றைப் பனை மரமே உதவியில்லா நெடுமரமே ---பழைய கவிஞர்களும் 
பனையை இழித்துதான் பாடினார்கள் 
பனைமரத்தின் கீழே பால் குடித்தாலும் கள் குடித்ததாகத்தான் சொல்வார்கள் -- 
பனை தரும் தூய பதநியை கள்ளாக்கியது யார் செயல் ? 
பனங் கம்பால் கூரை அமைக்கிறார்கள். பனை ஓலையால் கூரை வேய்கிறார்கள். 
அதில் குளிர்ச்சியாக வாழ்கிறார்கள். 
ஏன் ? கோடையில் விசிறியாக பனை ஓலைதானே பயன்படுகிறது. 
தென்னங் கீற்றிலா விசிறி செய்கிறார்கள் ? 
இழித்துப் பாடின இந்தப் புலவர்கள் எழுதியது இந்தப் பனை ஓலையில் தானே ....
இன்று உலக சாதனை நிகழ்வில் பூலோகத்துகல்பகதருவை.....தண்ணீர் அமைப்புடன் இணைந்து எம் பள்ளி மாணவக் கண்மணிகளுடன் இணைந்து நட்ட மகிழ்வான தருணம்.....நன்றி திரு சதீஸ் அவர்கள் 





நன்றி...திரு நீலமேகம் அவர்கள்...

No comments:

Post a Comment