https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Wednesday, June 07, 2017

"..புலியைக்காப்போம் புவியைக்காப்போம் "

இயற்கையைக்காப்போம் ............"..புலியைக்காப்போம் புவியைக்காப்போம் ". என்கிற கோஷம் எங்குப்பார்த்தாலும ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது .இதற்கு காரணம் என்ன? காட்டில் புலிகளின் எண்ணிக்கை குறைந்த தால். மனிதனுக்கு ஆதார சுருதியாக விளங்கும்இயற்கைச்செல்வங்கள் அழிந்துக்கொண்டேப்போகின்றன....ஒரு வருடத்தில் ஒரு புலிக்கு எத்தனை மான்கள் தேவை தெரியுமா? 40 மான்கள் தேவை.காட்டில் மான்கள்இல்லை என்றால் புலி என்ன செய்யும் .காட்டு எல்லையோர கிராமங்களில் இருக்கும் ஆடு , மாடுகளை அடித்துச்சாப்பிட புலி ஊருக்குள் வந்து விடுகிறது .எனவே காடுகள் நல்ல அடர்த்தியாகவும் , தேவையான பரப்பளவு கொண்டவையாகவும் , நீர்மற்றும் தாவர ஆதாரங்களோடும் இருந்தால்மட்டுமே வெவ்வேறு உயினங்கள் மனிதனோடு மோதல் இல்லாமல் சுதந்திரமாகவும் , ஆரோக்கியமாகவும் வாழமுடியும் .புலிக்குத்தேவை மான் .மானுக்குத்தேவை புல் .
புல்லுக்குத்தேவை நீர் . மனிதனுக்குத்தேவை தாவரங்கள்.இந்த இயற்கையின் சுழற்சி சரியாக இருந்தால் தான்தாவரங்களும் இருக்கும் . விலங்குகளும் இருக்கும் . மனிதனும் வாழ்வான் .அதனால் தான் புலியைக்காப்போம் . புவியைக்காப்போம் என்று சொல்லுகிறோம்..........
காட்டை அழித்து வீட்டைக்கட்டாமல் இயற்கையோடு இணைந்து வாழ்வோம் ........


No comments:

Post a Comment