Saturday, September 28, 2019
பிறந்த நாள் வாழ்த்து
பிரணவ் பிறந்தநாள்வாழ்த்துகள்
இன்று பிறந்த நாள் காணும் செல்வன் பிரணவ் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துவோம்...இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பிரணவ்....
உலக சாதனை நிகழ்வு பனை
நாயகன் நல்லாசிரியர் விருது
Rotary club of Jerms 10000 வழங்கிய நிகழ்வு






Sunday, April 07, 2019
சாதனைப்பெண்கள்
பிறந்த நாள் வாழ்த்துகள்
நெஞ்சில் நேர்மை இருந்தால் ...
குணத்தில் அழகு மிளிரும் ...
குணத்தில் அழகு இருந்தால்
இல்லத்தில் இணக்கம் வரும்
இல்லத்தில் இணக்கம் வந்தால்
நாட்டில் ஒழுங்கு நிலவும்
நாட்டில் ஒழுங்கு நிலவினால் உலகில் அமைதி தவழும் ..... என்று முன்னால் குடியரசுத்தலைவர்ஐயா
அப்துல்கலாம் அவர்கள் கூறியது போல , நேர்மை , பசுமை , உண்மை , வாய்ந்த தம்பி Shankar Shrijan அவர்களுக்கு அக்காவின் பிறந்த நாள் வாழ்த்துகள்...
சூரிய பெண்மணி விருது பென் குயின்ஸ் விருது
ஆண்டு விழா
இடமலைப்பட்டி புதூர் பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகிறேன்
திருச்சி மாவட்டம் இடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வரும் வெள்ளிக்கிழமை (22-03-2019), பள்ளி ஆண்டு விழா, பள்ளிச் சீர் விழா என முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது.
இப்பள்ளி ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்ட, சென்னையிலிருந்து வருகிறேன்.
இவ்விழாவிற்கு நான் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்த Latha Balaji ஆசிரியைக்கு எனது பேரன்பும் வாழ்த்துகளும்... அப் பள்ளி தலைமை ஆசிரியைக்கு எனது நன்றிகளும் உரித்ததாகட்டும்.
இயன்றோர் நிகழ்விற்கு வருக... சந்திக்கலாம். பிற்பகல் 2:30 மணியிலிருந்து இரவு வரை பல்வேறு கலை நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன.
வாருங்கள் அரசுப்பள்ளி மாணவர்களை ஆசிரியர்களோடு இணைந்து கொண்டாடுவோம்... சந்தித்து அளவளாவுவோம்.
முப்பெரும் விழா
முப்பெரும் விழா....22/03/2019....
கார்மேகம் நீரெடுத்து
கனமழைதான் பொழிதல்போல
ஊர்மக்கள் ஒன்றிணைந்து
சீர்கொண்டு வந்தார்கள்.
மகளுக்கு சீர்செய்யும்
மகிழ்வானப் பெற்றோராக,-உடன்
பிறந்தவளுக்குச் சீர் எடுக்கும்
உற்றநல் சகோதரனாக
சுற்றம் சூழ வந்தார்கள்
சுமந்து சீர் தந்தார்கள்.
கற்றலது தடையின்றிக்
காலமெல்லாம் தொடர்ந்திடவே
உற்றதோர் பொருளையெல்லாம்
உவகையுடன் தந்த நல்லப்
பெற்றோரைப் பெற்றதனால்
பெருமைகொள்ளுது எங்கள் இடைமலைப்பட்டி புதூர் பள்ளி
கல்யாணப் பெண்ணுக்குச்
சீர்கொண்டு வந்தனரே!
கல்விச் சாலைக்கு
இதுபோல் ஒரு சீரைக் கண்டதில்லைக் கேட்டதில்லை
எனக் காண்போர் வியந்திடவே
கைநிறைய அள்ளித்தந்த கரங்களை யாம் போற்றுகின்றோம்.!!!!