https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5WZRmcMxsusv_VaFFc-aroPsJxpPzPdkJgCs_k6zlLQhOFKvSxKy_a1ZDxy70qO6ji3s_dEFpjnhvlumFFjqtBj8xQsZ7t6M-AqJA04GYoGijFPrRNAeVtiM1toYYm1-SrrdnJQQihUeU/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Friday, August 25, 2017

மாற்றுத்திறன் மாணவரின் ஆற்றல்கண்டு போற்றிடவே ஏற்றமுடன் எமக்களித்தார் பத்து ரூபாய் பணவிடையை! பத்து ரூபாய் பணவிடை பழனிக்குமார் அனுப்பிவைக்க திலகர் என்ற மாணவரும் திகைப்போடு உவகை கொண்டு, கையொப்பம் போட்டு பெற்ற கனப்பொழுது நினைவில் தங்கும். கனிந்த இதயங்களும் கருணை மிகு பழனிக்குமாரும் இணைந்து செய்யும் ஊக்கமூட்டல் இதயத்தில் மகிழ்வு தரும். மாணவர் திறமைகளை மண்மீது வளர்த்தெடுக்க ஊக்கப் பரிசதுவும் உதவும் இது உறுதி! கனிந்த இதயத்திற்கும் கடையநல்லூர் PS திருநாவுக்கரசுக்கும் இடைமலைப்பட்டிபுதூரின் இனிய நன்றி ! நன்றி!

      

" பந்து ஒன்றை வீசிடுவோம் " பூமிக்கு மரத்தை பரிசாய் தந்திடுவோம்". விதைப்பந்து திருவிழா.................... ஏவுகனை நாயகன் *ஐயா அப்துல்கலாம் அவர்களின் இரண்டாம்* ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நமது *Shine TREEchy* அமைப்பினர் மண்ணுருண்டைகளின் உள்ளிருந்து மகப்பேறாகவிருக்கும் காடுகள் பசுமையான பாதைக்கு புதுத்தளம் அமைப்போம் என்பதை மையகருத்தாக கொண்டு *விதைப்பந்து திருவிழாவினை* விக்னேஷ் பள்ளி, உறையூரில் இன்று 29-07-17 காலை 8.30 மணிக்கு துவங்கினர் இந்த நிகழ்வில் காவேரி மெட்ரிக் பள்ளி மாணவிகளும் கலந்துக்கொண்டனர் .10000 விதைப்பந்துகளை 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தயாரித்தனர் . இதில். மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விதைகளை மண்ணில் மட்டும் அல்லாது மாணவ சமுதாயத்தின் மனதிலும் விதைத்தனர்.

           

Thursday, August 24, 2017

நேற்று மாலை 6 மணியளவில் திரு. APJ அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக திருச்சி மேலசிந்தாமணி அண்ணாச்சிலை அருகில் அய்யாவின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.அனைவரும் அய்யாவிற்கு நினைவு அஞ்சலி செலுத்தினார்கள். அய்யாவின் நினைவாக 500 மரக்கன்றுகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன .செயல் சமூக அறக்கட்டளையின் சார்பில் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

           

நட்புக்களே, செயல் அறக்கட்டளை சார்பாக திரு.A P J. அப்துல்கலாம் அய்யா அவர்களின் 2 -ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அய்யாவின் எண்ணங்களை பள்ளி மாணவ மாணவியரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக திருச்சி எடமலைப்பட்டி புத்தூர் மாநகராட்சி பள்ளியில் ஓவியப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடைப்பெற்றது. நாள் :- 27 .07 .2017 நேரம் :- மதியம் 2 முதல் 4 மணி வரை . போட்டியில் வென்று முதல் மூன்று இடங்களைப்பிடித்த மாணவ / மாணவியருக்கு பரிசும் , சான்றிதழும் வழங்கப்பட்டது . விழாவில் பங்கிக்கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன . பரிசுகளை வாரி தந்த செயல் அறக்கட்டளைக்கு நன்றி .! நன்றி!

          

குருதி வகை கண்டறியக் குதூகலமாய் துள்ளி வந்தார் பிள்ளைகளும்! வகையறிந்து பதிவு செய்ய வந்தவர்கள் வியந்துபோனார்! இடைமலைப்பட்டிப் புதூரின் இளந்தலைமுறை துனிச்சல் கண்டு! ஊசி எல்லாம் தூசி என்றே உற்சாகமாய் விரல்நீட்ட ஒருதுளியில் குருதிவகை கண்டறிந்து சொன்னார்கள். இப்பணிக்கு உதவிட்ட அர்பனிப்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி சென்னை சிறுதுளிக்கு சிறப்பு நன்றி ஏபி பாஸிட்டிவ் பால முருகன் அவர்களுக்கும் சிறப்பு நன்றி

         

வண்ணத்தில் எம்பள்ளி வகை வகையாய்த் திகழ்ந்திட எண்ணத்தில் விருப்பமுடன் எமக்களித்தால் நன்கொடை ஐவகை நிறங்கள் அனுப்பிய தங்கமனதுக்காரர் தங்கமுத்து வாழ்க !