https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Tuesday, August 15, 2017

காமராசர் பெருந்தலைவர் . கல்விக்கண்ணைத்திறந்தவர் .இருநூறு ஆண்டு காலத்தில் பெற்ற கல்வி வளர்ச்சிக்கு மேலான வளர்ச்சியை எட்டாண்டு காலத்தில் வழங்கியவர் காமராசர் என்று கல்வித்துறை அறிஞர் நெ. து. சுந்தரவடிவேலு குறிப்பிடுகிறார் . " கல்விக்கண் கொடுத்த வள்ளல் ". என்று பெரியார் அவர்கள் பாராட்டுரை வழங்கி உள்ளார்...... மாலைகளை வெறுத்த மாண்பாளர் அவர் . அவரது காலத்தில் தமிழகத்தில் தோன்றிய பள்ளிகளின் எண்ணிக்கை 6 ஆயிரம் .300 பேர் ஜனத்தொகை கொண்ட ஓர் ஊருக்கு ஓர் பள்ளி என்றுதிட்டமிடப்பட்டு காரியங்கள் நடந்தது. சுமார் 4 இலட்சம் என்றிருந்த கற்றோர் எண்ணிக்கை 13 இலட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது..... பூகோளம் புரிந்தவர் காமராசர் ...தொழில் வளம்பெருகினால் மக்கள் வளம் பெறுவர் என்ற தொலைநோக்குப் பார்வை உடையவர் தலைவர் அவர்கள் ...... விருதுப்பட்டியில் பிறந்து உலகம்புகழும் உன்னத தலைவராய் உயர்ந்த பெருந்தலைவரின் பிறந்த நாளை எம் பள்ளியில் இனிப்பு பொங்கலுடன் கொண்டாடினோம் .....,,,,,

          

No comments:

Post a Comment